அரசியல்வாதிகள் சொத்து பட்டியலை முழுமையாக தர வேண்டிய அவசியமில்லை: உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் இந்த வாரம், தேர்தல் நடைமுறை தொடர்பான முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் தேஜு தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏ கரிகோ கிரி தேர்ந்தெடுக்கப்பட்டதை நீதிமன்றம் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் ஜூலை 2023 தீர்ப்பை  ரத்து செய்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2024, 07:15 PM IST
அரசியல்வாதிகள் சொத்து பட்டியலை முழுமையாக தர வேண்டிய அவசியமில்லை: உச்ச நீதிமன்றம் title=

உச்ச நீதிமன்றம் இந்த வாரம், தேர்தல் நடைமுறை தொடர்பான முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் தேஜு தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏ கரிகோ கிரி தேர்ந்தெடுக்கப்பட்டதை நீதிமன்றம் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் ஜூலை 2023 தீர்ப்பை  ரத்து செய்தது.  எம்எல்ஏ கரிகோ தனது வேட்புமனுவில் மூன்று வாகனங்கள் வைத்திருப்பதாக குறிப்பிடாததன் அடிப்படையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் மூன்று முக்கிய கருத்துக்களை தெரிவித்தது. 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கும் 'தனியுரிமை' உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியது. வேட்பாளர் தன்னை நிரூபிக்க தனது அத்தனை விபரங்களையும் வாக்காளர்களுக்கு முன் வைக்க வேண்டும் என்பதில் உடன்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியது.  ஒரு வேட்பாளர் சொத்துகள் குறித்த அனைத்து விபரத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் கூறியது. வேட்பாளரைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் 'முழு உரிமை' வாக்காளருக்கு இல்லை என உச்ச நீதிமன்றம். 

எம்.எல்.ஏ.வின் அறிவிக்கப்பட்ட ரூ.8.4 கோடி சொத்துக்களுடன் ஒப்பிடும்போது அவர் குறிப்பிட்ட வாகன விபரங்களை அறிவிக்காதது முக்கியமற்றது என்றும் நீதிமன்றம் கூறியது. சில சொத்துக்கள் குறித்து குறிப்பிடாதது ஒரு பெரிய தவறு அல்ல. 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முக்கியமானது. உச்சநீதிமன்றம் இந்த முடிவைப் பற்றிய மூன்று முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

'தலைவர்களுக்கும் தனிப்பட்ட உரிமை உண்டு'

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பிலிருந்து தலைவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்க கூடும். சமூக ஊடகங்களின் சகாப்தத்தில், தலைவர்களுடன், அவர்களின் குடும்பங்களும் பல விதத்தில் பாத்திக்கப்படுகின்றன. ஏதேனும் தகவல் கிடைத்தால், ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் அதை மிகுந்த ஆர்வத்துடன் விவாதிக்கப்படுகின்றன. 

மேலும் படிக்க | பிரதமர் ரோட் ஷோ மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை - அதிமுக ஜெயவர்தன்

அரசியல்வாதிகளின் சொத்து விபரம் தொடர்பான விபரம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், தனிப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை தலைவர்களுக்கும் உள்ளது. பொது வாழ்க்கையில், தேவையில்லாத விபரங்களை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டிய தேவையில்லை என்று உச்சநீதி மன்றம் கூறியது.

'வேட்பாளரை அறிந்து கொள்ளும் வாக்காளரின் உரிமை வரையறைக்கு உட்பட்டது '

ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலுக்கு முன் தனது சொத்து விவரங்களையும், வழக்குகளையும் பொதுமக்கள் முன் வைப்பார்கள். ஜனநாயக நடைமுறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த விதி அமல்படுத்தப்பட்டது. 'வாக்காளர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு வேட்பாளர் தனது உயிரைப் பணயம் வைக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் கருதவில்லை. 'ஒரு வேட்பாளர் தனக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் வெளியிடாதது ஒரு குறைபாடாக கருதப்படாது' என்று நீதிமன்றம் கூறியது.

கரிகோ கிரி வழக்கில், வேட்பாளரைப் பற்றி தெரிந்துகொள்ள வாக்காளர்களிளுக்கு முழு உரிமை உள்ளது என கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தலைவரைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் உரிமை வாக்காளருக்கு இல்லை என்பதே இதன் பொருள். தலைவர்கள் குறித்து வாக்காளர் அறிந்து கொள்வது முக்கியமானது. ஆனால் பொது வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நடத்தையை அறிந்து கொள்ள மட்டுமே  தகவல் தேவை என்பது வரையறுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

மேலும் படிக்க | திருச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News