ஜனாதிபதி தேர்தல்: ஆதரவு திரட்ட ராம்நாத் கோவிந்த், மீரா குமார் இன்று சென்னை!!

Last Updated : Jul 1, 2017, 12:43 PM IST
ஜனாதிபதி தேர்தல்: ஆதரவு திரட்ட ராம்நாத் கோவிந்த், மீரா குமார் இன்று சென்னை!! title=

வரும் 17-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாரும் இன்று சென்னை வருகின்றனர். 

இருவரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் எம்.பி., எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராம்நாத் கோவிந்த், மீராகுமார் இருவரும் இன்று ஒரே நாளில் சென்னை வருகின்றனர்.

ராம்நாத் கோவிந்த்:

இன்று சென்னை வந்த ராம்நாத் கோவிந்த், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னால் முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திகிறார். அதிமுக இரு அணிகளிலும் உள்ள 50 எம்.பி.க்கள், 134 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

பிற்பகலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் என்.ரெங்கசாமி மற்றும் அவரது கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்களை சந்திக்கிறார். இந்த சந்திப்புகளின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதரராவ், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

மீரா குமார்:

எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமார் இன்று மாலை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து, லீலா பேலஸ் ஓட்டலுக்கு வரும் மீராகுமார் மாலை 6 மணிக்கு, திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கோருகின்றனர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களையும் சந்திகிறார். மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்.பி., எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

இரவு 8 மணிக்கு கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங் களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, திமுக மாநிலங்களவை 

உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபூபக்கர் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர்.குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் ஒரே நாளில் சென்னை வருவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News