பிரெட் பிஸ்கெட் விலை உயரலாம்; வெளியான அதிர்ச்சித் தகவல்

நடப்பு ஆண்டில் கோதுமைக்கான திறந்தவெளி விற்பனைத் திட்டத்தை (OMSS) மத்திய அரசு இன்னும் அறிவிக்காததால், அடுத்த மாதம் முதல் பிரெட், பிஸ்கட், சப்பாத்தி ஆகியவற்றின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2022, 01:40 PM IST
பிரெட் பிஸ்கெட் விலை உயரலாம்; வெளியான அதிர்ச்சித் தகவல் title=

நடப்பு ஆண்டில் கோதுமைக்கான திறந்தவெளி விற்பனைத் திட்டத்தை (OMSS) மத்திய அரசு இன்னும் அறிவிக்காததால், அடுத்த மாதம் முதல் பிரெட், பிஸ்கட், சப்பாத்தி ஆகியவற்றின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கோதுமை மாவு, பிரெட் மற்றும் பிஸ்கட் தயாரிப்பாளர்கள் திறந்த வெளி மார்க்கெட்டிற்கு வரும் சப்ளை  மற்றும் விலைகளை ஒழுங்குபடுத்தும் OMSS திட்டம் இன்னும் அறிவிக்கப்படாததால், பணவீக்கம் மற்றும் பருவம் அல்லாத காலத்தில் ஏற்படும் பற்றாக்குறை காரணமாக விலை ஏற்றம் இருக்கலாம் என அஞ்சுகின்றனர்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போதும், பருவ மழை காலத்திலும், பிரெட் மற்றும் சிற்றுண்டிகளின் தேவை  அதிகரிக்கும் போது ஜூன் மாதத்திலிருந்து இதன் தாக்கத்தை உணரக் கூடும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அமேசானையே அலறவிட்ட ஹேக்கர்ஸ்!- நெட்டிசன்ஸ் ஷாக்!

இந்திய உணவுக் கழகத்தின் (FCI) இணையதளத்தில் OMSS திட்டத்தில் கோதுமையை அவ்வப்போது விற்படும். இதன் மூலம்  பருவம் அல்லாத காலத்தில் உணவு தானியங்கள், குறிப்பாக கோதுமை விநியோகத்தை அதிகரிக்கவும், பற்றாக்குறை உள்ள பகுதிகளில் திறந்த சந்தை விலையை குறைக்கவும் உதவுகிறது.

சந்தையில் கோதுமையின் நிலையைப் பொறுத்து, கோதுமை மில் தொழில் துறை FCI இடம் இருந்து கோதுமையை  ஆண்டு ஒன்றுக்கு 7-8 மில்லியன் டன்கள் வரை வாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் கோதுமை இருப்பு அதிகமாக இருந்ததால், FCI தன்னிடம் இருப்பில் உள்ள கூடுதல் கோதுமையை விற்க தள்ளுபடகளையும் , சரக்கு மானியங்களையும் வழங்கியது.

உள்நாட்டு கோதுமை பதப்படுத்தும் தொழில் 2021-22ல் 7 மில்லியன் டன் கோதுமையை அரசாங்கத்திடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது. இந்த ஆண்டு, OMSS கொள்கையை அரசு நீட்டிக்கவில்லை என்றால், தொழில் துறையினர் 100% கோதுமையை வெளிச்சந்தையில் இருந்து வாங்க வேண்டியிருக்கும். இதனால் உற்பத்தி செலவி அதிகரித்து விலைகள் உயரக்கூடும்.

இந்த ஆண்டு, FCI தனியார் வணிகர்களுக்கு கோதுமையை விற்பது குறித்து சந்தேகம்  எழுப்பியுள்ள அரசு, கோதுமையை கொள்முதல் செய்வதில் FCI-யை சார்ந்து இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாக மில் உரிமையாளர் ஒருவர் கூறினார்.

தற்போது அறுவடை காலம் நடந்து வருவதால் மண்டிகளில் கோதுமை கிடைக்கிறது. நவம்பர்/டிசம்பர் வரை கோதுமையை சந்தைக்கு கொண்டு வராததால் விலையில் உண்மையான தாக்கம் ஒரு மாதத்திற்கு பிறகு தெரிய வரலாம் என்கின்றனர்.

வேறு எந்த விலை நிர்ணய வழிமுறையும் இல்லாத நிலையில், OMSS விலைகள் கோதுமைக்கான சந்தை அளவுகோலாக செயல்படுகின்றன.

தற்போதைய ரபி பருவத்தில் அரசாங்கம் 19.5 டன் கோதுமையை கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது 18.99 மில்லியன் டன்கள் இருப்பில் வைக்கப்படும். இவ்வாறு, மதிப்பிடப்பட்ட 38.5 மில்லியன் டன் இருப்பில் இருந்து, பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் 30.5 மில்லியன் டன்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. பின்னர் 7.5 மில்லியன் டன் கோதுமையை அவசரகால பயன்பாட்டிற்கு வைத்திருப்பதற்கான பஃபர் ஸ்டாக் தேவைகளை பூர்த்தி செய்ய ஒதுக்கி வைத்த பிறகு, அரசாங்கத்திற்கு OMSS திட்டத்திற்கான கோதுமை இருப்பு இல்லாமல் போகலாம் என்று தொழில்துறை அஞ்சுகிறது. 

மேலும் படிக்க | இனி போன்களில் சிம் கார்டுகள் போட முடியாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News