இன்று ஸ்மார்ட் சிட்டிகளுக்கான பணிகளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Last Updated : Jun 25, 2016, 11:01 AM IST
இன்று ஸ்மார்ட் சிட்டிகளுக்கான பணிகளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி title=

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிக்களை உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. 
முதல் கட்டமாக ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 20 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் முதல் கட்டமாக  புனே, ஆமதாபாத், புவனேஸ்வர், ஜபல்பூர், கொச்சி, காக்கிநாடா, ஜெய்ப்பூர்,சென்னை, கோவை உள்ளிட்ட 20 நகரங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டன. ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

முதல் கட்டமாக  ரூ.1,770 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் தொடங்க உள்ளது.  மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெறும் விழாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பிரதமர் மோடி இன்று நேரடியாக துவங்கி வைக்கிறார். பிற நகரங்களில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 100 ஸ்மார்ட் நகரங்களை அமைப்பதன் மூலம் கிராமங்கள் நகரங்கள் இடையே உள்ள இடைவெளி குறையும். ஏழை மக்களின் பொருளாதார மேம்பாடு, வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

பிரதமர் கலந்து கொள்ளும் கட்சியை பாரதீய ஜனதாவை தவிர ஏனைய அனைத்து உள்ளூர் கட்சிகளும் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது.

Trending News