இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் இல்லை; பலம்: ராகுல் காந்தி

பல மொழிகளை இந்தியா கொண்டுள்ளது என்பது பலவீனம் இல்லை என ராகுல் காந்தி ட்விட்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 16, 2019, 09:00 PM IST
இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் இல்லை; பலம்: ராகுல் காந்தி title=

புதுடெல்லி: தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளை இந்தியா கொண்டுள்ளது என்பது பலவீனம் இல்லை என ட்விட்டர் பக்கத்தில் முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று, அதிக மக்களால் பரவலாக பேசப்படும் "இந்தி" தான் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்கக்கூடிய மொழி என்றும், அதுதான் இந்தியாவின் பொதுமொழியாக இருக்க வேண்டும் எனக்கூறினார். இவரின் இந்த கருத்து சில மாநிலங்களை தவிர்த்து பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிப்பதா என்று மத்திய அரசுக்கும், உள்துறை அமைச்சருக்கும் எதிராக கடும் கண்டனத்தை அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பெங்காலி, உருது, ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை குறிப்பிட்டு, இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது" எனக் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Trending News