பருவ மழையின் கோரத் தாண்டவம்; வெள்ளக் காடாய் மாறிய கேரளா!

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துவரும் நிலையில் கேரளாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Jul 31, 2018, 01:22 PM IST
பருவ மழையின் கோரத் தாண்டவம்; வெள்ளக் காடாய் மாறிய கேரளா! title=

திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துவரும் நிலையில் கேரளாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது!

தென்மேற்கு பருவமழை துவங்கி வெளுத்து வாங்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலம் திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கோகுல் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்து உள்ளது. பலத்த காற்றுடன் பெய்யும் கன மழையால் மாவட்டத்தில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும், மண் சரிவும் ஏற்பட்டும் வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டம் முழுவதும் நேற்று விடுமுறை விடபட்டிருந்தது. 

இந்நிலையில், இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Trending News