ஒடிசா மாநிலம் பாரிபடா குடியிருப்பு பகுதியில் அரிய வகை பாம்பு மீட்பு!

ஒடிசா மாநிலம் பாரிபடா குடியிருப்பு பகுதியில் அதிக விஷத்தனைமை கொண்ட ப்ரவுன் வொயின் பாம்பு பிடிபட்டன!

Last Updated : Nov 19, 2018, 11:26 AM IST
ஒடிசா மாநிலம் பாரிபடா குடியிருப்பு பகுதியில் அரிய வகை பாம்பு மீட்பு! title=

ஒடிசா மாநிலம் பாரிபடா குடியிருப்பு பகுதியில் அதிக விஷத்தனைமை கொண்ட ப்ரவுன் வொயின் பாம்பு பிடிபட்டன!

சுமார் 4.5 அடி நீளம் கொண்ட இந்த அரியவகை விஷப்பாம்பு ஒடிசாவின் மயுர்பஹஜன் மாவட்டத்தின் லால்பஜார் குடியிருப்பு பகுதியில் இந்த பாம்பு பிடிப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது மனித பாதிப்புகள் ஏதும் இல்லை எனவும், பிடிப்பட்ட பாம்பினை பின்னர் வனத்துறை உதவியுடன் காட்டுப்பகுதியில் விட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த நவம்பர் 11-ஆம் நாள் இதேப்பகுதியில் அதிக விஷத்தன்மை கொண்ட ரஸ்ஸல் வைப்பர் வகை பாம்புகள் பிடிப்பட்டன. ஒடிசா மாநிலம் மயுர்பஹஜ் மாவட்டத்தில் உள்ள பாரிபடா சிறை வளாகத்தில் இந்த ரஸ்ஸல் வைப்பர் வகை பாம்புகள் இரண்டு பிடிப்பட்டது. சிறை அதிகாரி தகவலின் படி பிடிப்பட்ட பாம்பில் ஒன்று ஆண் எனவும், மற்றொன்று பெண் எனவும் குறிப்பிடப்பட்டது. சுமார் 4.5 அடி நீளமுள்ள இரண்டு பாம்புகளும் சுமார் 4 கிலோ எடை கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தற்போது இதேப் பகுதியில் மீண்டும் விஷப் பாம்புகள் பிடிப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Trending News