உத்தரகாண்ட் மாநிலத்தை மிரட்டும் கனமழை...!

உத்தரகாண்ட்டில், கனமழை காரணமாக கங்கை நதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

Last Updated : Aug 25, 2018, 05:15 PM IST
உத்தரகாண்ட் மாநிலத்தை மிரட்டும் கனமழை...!  title=

உத்தரகாண்ட்டில், கனமழை காரணமாக கங்கை நதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

தென்மேற்கு பருவமழையால் வெள்ளக்காடாக மாறிய கேரள மாநிலத்துக்கு அடுத்தபடியாக வட மாநிலங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.

இதனொரு பகுதியாக, ரிஷிகேஷ் நகரில் உள்ள கங்கை நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைபுரண்டு ஓடும் வெள்ளநீரின் தாக்கத்தால் ரிஷிகேஷின் அடையாளம் நீரால் மறைக்கப்பட்டுள்ளது.

 

Trending News