தேசபக்தி என்பது இந்துக்களின் அடிப்படை தன்மை: RSS தலைவர் மோகன் பகவத்

காந்தியின் ‘ஸ்வராஜ்’ கருத்தாக்கத்தைப் பற்றிப் பேசிய பகவத், காந்தியைப் பொறுத்தவரை ‘ஸ்வராஜ்’ போராட்டம் நாகரிக விழுமியங்களின் அடிப்படையில் சமூகத்தை புனரமைப்பதாகும் என்றார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 2, 2021, 01:59 PM IST
  • ‘Making of a Hindu Patriot: Background of Gandhiji’s Hind Swaraj’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் மோகன் பகவத் பேசினார்.
  • காந்தியைப் பற்றிய உண்மையான அறிவார்ந்த ஆராய்ச்சி ஆவணமாக இந்த புத்தகம் உள்ளது என மோகன் பகவத் தெரிவித்தார்.
  • ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை இந்து மதம் நம்புகிறது என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார்.
தேசபக்தி என்பது இந்துக்களின் அடிப்படை தன்மை: RSS தலைவர் மோகன் பகவத் title=

மகாத்மா காந்தியின் கருத்துக்களை மேற்கோள் காட்டிய, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (RSS ) தலைவர் மோகன் பகவத் வெள்ளிக்கிழமை இந்துக்கள் எப்போதும் தேசபக்தராக இருப்பார், ஏனெனில் தேசப்பற்று, தேச பக்தி என்பது இந்துக்களின் அடிப்படை தன்மை மற்றும் இயல்பு என்று கூறினார். 

ஜே.கே. பஜாஜ் மற்றும் எம்.டி. சீனிவாஸ் எழுதிய ‘Making of a Hindu Patriot: Background of Gandhiji’s Hind Swaraj’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் மோகன் பகவத் (Mohan Bhagwat) பேசினார்.

காந்தியைப் பற்றிய உண்மையான அறிவார்ந்த ஆராய்ச்சி ஆவணமாக இந்த புத்தகம் உள்ளது என விவரித்த மோகன் பகவத், மகாதமா காந்தி தனக்கு தர்மமும் தேசபக்தியும் வேறுபட்டதல்ல என்பதோடு அவரது தாய்நாட்டின் மீதான அன்பு அவரது ஆன்மீகத்திலிருந்து உருவாகிறது என கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“ஒருவர் இந்து என்றால் அவர் தேசபக்தி நிறைந்தவராக இருக்க வேண்டும், அது அவருடைய அடிப்படை தன்மை மற்றும் இயல்பு. சில நேரங்களில் அவரது தேசபக்தியை நாம் தூண்ட வேண்டியிருக்கும், ஆனால் இந்துவால் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரானவராக இருக்க முடியாது. ஒருவர் தனது நாட்டை நேசிக்கிறார் என்றால் அது அந்நாட்டின் மண்ணை மட்டும் குறிக்காது, அதன் மக்கள், ஆறுகள், கலாச்சாரம், மரபுகள் ஆகிய எல்லாவற்றையும் குறிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், ”என்று ஆர்எஸ்எஸ் (RSS) தலைவர் கூறினார்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை இந்து மதம் நம்புகிறது என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார். "வேறுபாடு என்பது பிரிவினைவாதத்தை குறிக்காது, இந்து மதம் அனைத்து மதங்களின் மதம் என்று காந்திஜி கூறியுள்ளார்," என்று மோகன் பகவத் கூறினார்.

ALSO READ  சாதனை அளவை எட்டியது GST வசூல்... 2020 டிசம்பரில் ₹1.15 கோடி வசூல்..!!!

காந்தியின் ‘ஸ்வராஜ்’ கருத்தாக்கத்தைப் பற்றிப் பேசிய பகவத், காந்தியைப் பொறுத்தவரை ‘ஸ்வராஜ்’ போராட்டம் நாகரிக விழுமியங்களின் அடிப்படையில் சமூகத்தை புனரமைப்பதாகும் என்றார்.

இதற்கிடையில், புத்தகத்தில், ஆசிரியர்கள் காந்தி, லியோ டால்ஸ்டாய்க்கு எழுதியுள்ளதையும் மேற்கோளிட்டுள்ளனர். அதில் அவர் "எனது தேசபக்தி, இந்தியா மீதான என் பற்றி எப்போதும் அதிகரித்து வருகிறது, அந்த பற்று என்பது எனது மதத்திலிருந்து கிடைத்தது." என காந்தி கூறியுள்ளார்

புத்தகத்தை பற்றி குறிப்பிட்ட பஜாஜ், போர்பந்தரில் இருந்து இங்கிலாந்து மற்றும் பின்னர் தென்னாப்பிரிக்கா என்ற வகையில் காந்தியின் வாழ்க்கையை பற்றி எழுதியுள்ளதாக கூறினார்.

1893-94 க்கு இடையில் காந்தியின் முஸ்லீம் முதலாளி மற்றும் அவரது கிறிஸ்தவ சக ஊழியர்களால் , தங்களது மதங்களுக்கு மாறுமாறு அழுத்தம் கொடுத்தனர், ஆனால் அவர் மறுத்துவிட்டார் என குறிப்பிட்டார்.

1905 வாக்கில், அவர் ஒரு பக்தியுள்ள இந்து ஆனார் என்பதோடு, இந்து மதம் பற்றிய விரிவுரைகளையும் வழங்கினார் என பஜாஜ் கூறினார். தென்னாப்பிரிக்காவில் சட்டம் பயின்றபோது, ​​நீதிமன்றங்கள் முன் தனது மனுக்களில் பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை காந்தி மேற்கோள் காட்டிய நிகழ்வுகளை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

ALSO READ | Big Announcement: நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News