இந்தியாவில் "டைனோசர்" வாழ்ந்த இடம்! வெளியான ஷாக்கிங் ரிப்போட்!

Dinosaur In India: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்... வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்! ஆதி முதல் அந்தம் வரை டைனோசரின் இந்திய சகாப்தம்

Written by - Ezhilarasi Palanikumar | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 9, 2023, 07:04 PM IST
  • இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்
  • வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!
  • ஆதி முதல் அந்தம் வரை: டைனோசரின் இந்திய சகாப்தம்
இந்தியாவில் "டைனோசர்" வாழ்ந்த இடம்! வெளியான ஷாக்கிங் ரிப்போட்! title=

புதுடெல்லி: பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய வகை தாவர உன்னில் டைனோசர் உயிரினம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், விண்கல் தாக்குதல், எரிமலை வெடிப்பு என பல்வேறு பிரச்சினைகளால் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே டைனோசர் என்ற இனம் அழிந்துவிட்டது இருந்தாலும் அதன் பிரம்மாண்டம் அனைவரையுமே பிரம்மிக்க வைக்கும். இந்நிலையில் டைனோசர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஆங்காங்கே நமக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்

அந்த வகையில் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் என்ற பகுதியில் 2018 இல் டைனோசர் தொடர்பான ஆய்வு என்பது  ஐஐடி மற்றும் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டு வருகிறது. ஜெய்சால்மரில் உள்ள பாறைகளை ஆய்வு செய்தபோது இங்கு புதை படிவங்கள் இருப்பது முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஆறு விஞ்ஞானிகள் கொண்ட குழு சுமார் ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்த பின்னர் இந்த அரிய வகை டைனோசர் பற்றிய  கண்டுபிடிப்பை உலகிற்கு தெரிவித்துள்ளது

167 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர்

இயற்கை பற்றிய சர்வதேச இதழான சயின்டிஃபிக் ரிப்போர்ட்சன் ஆய்வுப்படி  ஜெய்சால்மர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் 167 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்றும் இதுவரை விஞ்ஞானிகளால் அறியப்படாத புதிய இனத்தை சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு tharosaurus indicus இன்று பெயரிடப்பட்டிருக்கும் நிலையில் தார் என்பது தார்பாலைவனத்தை குறிக்கும் வகையிலும் indicus என்பது அதன் பிறப்பிடத்தை குறிக்கும் வகையிலும் பெயர் வைக்கப்பட்டுள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த வகையை டைனோசர்களின் புதை படிவங்கள் என்பது இதற்கு முன்னர் தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா மற்றும் சீனா போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஆனால் இந்தியாவில் இது அறியப்படவில்லை என்றும் அந்த இதழின் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Dinosaurs: நீல திமிங்கலம் போன்ற பிரம்மாண்டமான டைனோசர்கள்

700 க்கும் மேற்பட்ட டைனோசர் இனங்கள் 

இதுவரை உலகில் 700 க்கும் மேற்பட்ட டைனோசர் இனங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படும் நிலையில் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைக்ரேயோசொரிட் என்பதும் ஒரு வகையான தாவரங்களை உண்ணும் நீண்ட காலத்தைக் கொண்ட டைனோசர் இனம் என்றும், விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் இது பற்றி பேசி உள்ள ஐஐடி ரூர்கியை சேர்ந்த பேராசிரியர் சுனில் பாஜ்பாய் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் படிமங்கள் தொடர்பான ஆராய்ச்சி திட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தொடங்கி வைக்கப்பட்டது அதில் தற்போது வரலாற்று சிறப்புமிக்க பழமையான படிவத்தை கண்டறிந்துள்ளோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் குறிப்பிடப்பட்ட டைனோசர் அழிவு

காலநிலை மாற்றம், விண்கல் தாக்குதல், எரிமலை வெடிப்பு என பல்வேறு பிரச்சினைகளால் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே டைனோசர் என்ற இனம் அழிந்துவிட்டது இருந்தாலும் அதன் பிரம்மாண்டம் அனைவரையுமே பிரம்மிக்க வைக்கும். இந்நிலையில் கிட்டத்தட்ட இன்றிலிருந்து 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக டைனோசர் இனத்திற்கு அது ஒரு துக்க நாளாக இருந்திருக்க கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அதன்படி மிகப்பெரிய  விண்கலான chicxulub crater  தாக்கியதன் காரணத்தினால் 180 மில்லியன் ஆண்டுகளாக பூமியை ஆட்சி செய்து கொண்டிருந்த  டைனோசர்கள் அழிந்து விட்டதாக வரலாறுகளில் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் ஒரு கப் ஊறவைத்த 'இந்த' நீரை குடிங்க.. பலனெல்லாம் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News