முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகில் காரில் வெடிபொருட்கள், அச்சுறுத்தல் கடிதம்

முகேஷ் அம்பானியின் பிரம்மாண்டமான சொகுசு வீடு அன்டிலியா (Antilia) அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 26, 2021, 02:55 PM IST
  • மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டது.
  • மிரட்டல் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது குறித்து மும்பை காவல்துறையினர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
  • காவல்துறையினர் அதன் பணியாளர்களை அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்
முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகில் காரில் வெடிபொருட்கள், அச்சுறுத்தல் கடிதம் title=

முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே காரை நிறுத்திய சந்தேக நபரை சி.சி.டி.வி கேமரா காட்டிக் கொடுத்துவிட்டது. ஆனால் அந்த நபர், முகக்கவசம் அணிந்து, தலையில் தொப்பியும் போட்டு இருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
 

முகேஷ் அம்பானியின் பிரம்மாண்டமான சொகுசு வீடு அன்டிலியா (Antilia) அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. அதற்கு அடுத்த நாள் காவல்துறையினர் காரில் இருந்த மிரட்டல் கடிதத்தைக் கண்டுபிடித்துள்ளனர். மும்பை காவல்துறையின் வட்டாரத்தின்படி, ‘கொச்சை ஆங்கிலத்தில்’ கையால் எழுதப்பட்ட கடிதம் அது. கோடீஸ்வர தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. 

மிரட்டல் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது குறித்து மும்பை காவல்துறையினர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அடுத்த முறை ‘உண்மையான’ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மிரட்டல் கடிதம் எச்சரிக்கை விடுத்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

“ஆன்டிலியா அருகே வெடிபொருட்களுடன் காரில் ஒரு கடிதமும் காணப்பட்டது. கையால் எழுதப்பட்ட கடிதத்டில் இலக்கண பிழைகள் இருந்தன. உடைந்த ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த மிரட்டல் கடிதம், முகேஷ் மற்றும் நீதா அம்பானிக்கு எழுதப்பட்டது”என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

"இது முழு குடும்பத்தையும் படுகொலை செய்யும் முயற்சியின் முதல் படி. இன்னும் பலத்த முன்னேற்பாடுகளுடன் கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கான எச்சரிக்கையாகும்" என்று கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கூறப்படும் அச்சுறுத்தல் கடிதம் இதுதான்: “நிதா பாபி மற்றும் முகேஷ் பயா ஆகியோருக்கு இது ஒரு டிரெய்லர் மட்டுமே. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன… ’பிக்சர் அபி பாக்கி ஹை; என்ற பிரபல ஹிந்தி திரைப்பட வசனம் அதில் எழுதப்பட்டிருந்தது. ”

வியாழக்கிழமையன்று, மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, காவல்துறையினர் அதன் பணியாளர்களை அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

ALSO READ | சமூக ஊடகங்கள், OTT தளங்களுக்கு கடிவாளம்: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News