ஷோபியான் எண்கவுண்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை...

ஷோபியான் பகுதியில் JeM அமைப்பை சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

Last Updated : Feb 27, 2019, 10:34 AM IST
ஷோபியான் எண்கவுண்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை... title=

ஷோபியான் பகுதியில் JeM அமைப்பை சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

சோபியான் மாவட்டம் மீமெண்டர் பகுதியில் ((Meemendar)) தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இன்று அதிகாலை பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அப்பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது, தீவிரவாதிகள் தாக்குதல் தொடுக்கவே, வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

அதிகாலை நான்கரை மணி தொடங்கி நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுவதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

 

Trending News