ஓய்வூதிய கோரிக்கைப் போராட்டத்தால் ஸ்தம்பித்த அரசு சேவைகள்! 3 நாளாக வேலைநிறுத்தம்

Protest For On Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி மகாராஷ்டிர ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் 3வது நாளாக தொடர்கிறது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 17, 2023, 12:47 PM IST
  • பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த அரசு ஊழியர்கள் போராட்டம்
  • மகாராஷ்டிராவில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்
  • மக்களுக்கான சேவைகளை முடக்கிய ஓய்வூதிய மறு அமலாக்கப் போராட்டம்
ஓய்வூதிய கோரிக்கைப் போராட்டத்தால் ஸ்தம்பித்த அரசு சேவைகள்! 3 நாளாக வேலைநிறுத்தம் title=

மும்பை: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக மகாராஷ்டிரா ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது, அரசு அதிகாரிகள் பிடிவாதமாக இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குற்றம் சாட்டும் நிலையில், போராட்டம் பல நாட்கள் தொடரும் என்றும், விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது. 
 
போராட்டத்தில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில அரசு ஊழியர்கள் 
மகாராஷ்டிர மாநிலத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைக்கக் கோரி மாநில அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் மூன்றாவது நாளான இன்று, பொதுச் சேவைகள் கிடைக்காமல் மக்கள்கள் அவதியுற்று வருகின்றனர்.

தனியார் ஏஜென்சிகளை நியமித்த அரசு 

இதற்கிடையில், ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்ப மாநில அரசு தனியார் ஏஜென்சிகளை நியமித்துள்ளது தெரிய வந்திருப்பதால், போராட்டத்தை பரிசீலிக்க மாநில அரசு தயாராக இல்லை என்று தெரியவந்துள்ளது.

தொடரும் போராட்டம் 

போராட்டம் தொடர்வதற்கு அரசாங்கத்தின் "பிடிவாதமான அணுகுமுறை" காரணம் என, வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைக்கும் தொழிற்சங்கங்களின் முக்கிய அமைப்பு குற்றம் சாட்டியது. வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனைகள் வெறிச்சோடின

வேலைநிறுத்தத்தால் அரசு மருத்துவமனைகள் மிகவும் பாதிக்கப்பட்டன, இது நிர்வாகத்தின் செயல்பாடுகளையும் பாதித்தது. வேலைநிறுத்தம் தொடங்கிய மார்ச் 14 அன்று, தொழில்கள், எரிசக்தி மற்றும் தொழிலாளர் துறையால் வெளியிடப்பட்ட அரசாங்கத் தீர்மானத்தின்படி, "அதிக திறமை வாய்ந்த, திறமையான, அரை திறமையான மற்றும் திறமையற்ற" பணியாளர்களை பணியமர்த்த ஒன்பது தனியார் ஏஜென்சிகள் நியமிக்கப்பட்டுள்ளன.  

மேலும் படிக்க | Old Pension Scheme: மீண்டும் வருகிறது பழைய ஓய்வூதியத் திட்டம், ஊழியர்களுக்கு ஜாக்பாட்!!

காலிப் பணியிடங்கள்

அரசாங்கத்தில் காலியாக உள்ள சுமார் 2,37,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்த வேண்டும், ஓய்வுபெறும் வயதை 58லிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்பது வேலைநிறுத்தப் பணியாளர்களின் கோரிக்கைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

"அரசாங்கத்தின் பிடிவாதமான அணுகுமுறையால்" வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமையான இன்று மூன்றாம் நாளாக தொடர்வதாக, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுமார் 35 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வாஸ் கட்கர் தெரிவித்துள்ளார்.

"மகாராஷ்டிர அரசு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தும் வரை எங்களது வேலைநிறுத்தம் தொடரும். பிரச்சினையை ஆராய அரசு நியமித்துள்ள மூன்று பேர் கொண்ட குழுவை நாங்கள் ஏற்கவில்லை" என்று அவர் கூறினார்.

வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும்: மனுதாக்கல்

இதற்கிடையில், வேலைநிறுத்தத்தை உடனடியாக வாபஸ் பெறக் கோரி வழக்கறிஞரும் ஆர்வலருமான குன்ரதன் சதாவர்தே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வேலைநிறுத்தம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதிப்படுகின்றனர், பொதுத்தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 ஜாக்பாட் அறிவிப்புகள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News