கொலுசுக்காக பாதங்களை துண்டாக வெட்டிய கொடூரம் - 108 வயது பாட்டி என்றும் பாராமல்...

ராஜஸ்தானில் வெள்ளிக்கொலுசை திருடுவதற்கு 108 வயது மூதாட்டியின் காலை துண்டாக வெட்டிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Oct 9, 2022, 06:56 PM IST
  • அந்த மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
  • நள்ளிரவில் கோயிலுக்கு சென்ற மூதாட்டியின் மகள் அதிகாலை வந்து சம்பவத்தை அறிந்துள்ளார்.
  • தற்போது மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலுசுக்காக பாதங்களை துண்டாக வெட்டிய கொடூரம் - 108 வயது பாட்டி என்றும் பாராமல்... title=

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று (அக். 9) ஒரு கொடூர திருட்டுச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஜெய்ப்பூரின் பாஸ் படன்புரா மீனா காலனியின் 108 வயதான மூதாட்டி ஒருவர் மகளுடன் வசித்து வந்தார்.  அவரது மகள் நள்ளிரவில் கோயிலுக்கு சென்றால், அந்த மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலையில் அவரது மகள் ஜமுனா தேவி வீடு திரும்பியபோது, அவரது வீட்டின் அருகிலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது தாயை அவர்   கண்டெடுத்துள்ளனர்.

அவரின் இரண்டு கால் பாதங்களும் வெட்டப்பட்டிருந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். மூதாட்டிக்கு அருகிலேயே துண்டிக்கப்பட்ட பாதமும், துண்டிக்கப்பதற்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் அவரது கைப்பற்றியுள்ளார். அவர் காலில் இருந்த வெள்ளி கொலுசுகளும், தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளதையும் அறிந்துள்ளார்.

மேலும் படிக்க | ஆணுறுப்பை பெரிதாக்க நினைத்து... ஆபத்தில் முடிந்த காரியம் - வெல்டிங் கட்டரால் வெட்டி எடுப்பு

தொடர்ந்து, அந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயவியல் துறையினரின் உதவியுடன் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியின் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் துரிதமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட மூதாட்டி நலமடைந்து, அவரால் பேச முடியும்போது அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து, மூதாட்டிக்கு ஏற்பட்ட கொடுமையை அறிந்த அம்மாநில அமைச்சர் மகேஷ் ஜோஷி சம்பவ இடத்திற்கு விரைந்தார். மேலும், குற்றவாளிக்ளை விரைவில் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"சம்பவம் நடந்த இடத்தை சேர்ந்த மக்களுக்கு கடுங்கோபத்துடன் கூடிய அச்சமும் எழுந்துள்ளது. எனவே, குற்றவாளிகளை விரைவில் பிடிக்க வேண்டுகோள் விடுத்துல்ளனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தங்களின் விசாரணை ஏற்கெனவே தொடங்கிவிட்டனர்" என்றார்.   

மேலும் படிக்க | 17 கொலை செய்த சைக்கோ கொலைக்காரனின் கண்ணாடி பல மில்லியனுக்கு விற்பனை - காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News