இஸ்லாமிய மதத்தில் திருமணம் ஆன ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முத்தலாக் முறையை பின்பற்றி வருகின்றனர். இதுகுறித்து இஸ்லாமிய பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த முதலாக் முறையால் பாதிக்கப்படும் இஸ்லாமிய பெண்கள் காவல் துறையினரை முடியாமல், தண்டனைக்கான விதிகள் இல்லாததால் தவறு செய்யும் ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.
முத்தலாக் தீர்ப்பு: டிவிட் செய்த பிரதமர் மோடி!!
இதைத்தொடர்ந்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதாவை தயாரித்தது. இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் நடைமுறையை பின்பற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு அதிக பட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி: பட்சை கொடியுடன் நிறைவேற்றம்!
இந்நிலையில், முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் குளிர்கால கூட்டத்தொடரில் ‘முத்தலாக் தடை மசோதா’ நிறைவேற்றியது மத்திய அரசு. ‘முத்தலாக் தடை சட்டம்’ முழு வடிவம் பெற டெல்லி மேல் சபையில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
கனிமொழி: முத்தலாக் சட்ட மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனை அவசியம்!!
இன்று முத்தலாக் தடை மசோதா டெல்லி மேல் சபையில் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது, ஆனால், இந்த மசோதா நாளை தான் டெல்லி மேல்-சபையில் தாக்கல் செய்யப்படும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் தெரிவித்தார்.
We are in talks with Congress party and others for the #TripleTalaqBill, hope for a smooth passage in Rajya Sabha. Kal pesh ho sakta hai: Parliamentary Affairs Minister Ananth Kumar pic.twitter.com/3Kffbujsmy
— ANI (@ANI) January 2, 2018