இந்தியாவில் பாரம்பரிய கட்டிட தொழில்நுட்பமான செங்கல் மற்றும் பிற மூலப்பொருட்களை கொண்டு கட்டப்படும் கட்டிடங்களை போல இல்லமால் முழுக்க முழுக்க ரோபோ தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட அதிநவீன 3D அச்சிடப்பட்ட அஞ்சல் அலுவலகம் பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ளது. இது பிரபல லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனம் தயாரிக்க மற்றும் சென்னை IIT நிறுவன வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது.
பெங்களுருவில் அமைந்துள்ள இந்த தபால் அலுவலக கட்டிடம் 1021 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட தபால் நிலைய கட்டிடத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். பெங்களுரு நகரின் கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் 1,021 சதுர அடியில் கட்டப்பட்ட 3டி அச்சிடப்பட்ட அஞ்சல் அலுவலகக் கட்டிடம் திறப்பு விழாவைத் தொடர்ந்து செயல்படும் என்று அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தபால் நிலையத்தை திறந்து வைத்த பிறகு பேசிய, ரயில்வே, தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி இலாகாக்களை வைத்திருக்கும் வைஷ்ணவ் கூறியதாவது: வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஆர்வம், நம்முடைய சொந்த தொழில்நுட்பத்தை வளர்க்கும் மனப்பான்மை, முந்தைய காலங்களில் சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட ஒன்றைச் செய்யும் மனப்பான்மை, ஆகியவை தற்போதைய காலத்தின் அம்சத்தை வரையறுக்கிறது." தனித்துவமான கட்டிடம் பற்றி வைஷ்ணவ் கூறுகையில், இந்த புதிய கட்டுமான தொழில்நுட்பம் 3D-கான்கிரீட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது, இது ஒரு முழு தானியங்கி கட்டிட கட்டுமான தொழில்நுட்பமாகும், இதில் ஒரு ரோபோடிக் பிரிண்டர் அனுமதிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் சிறப்பு தரத்தின்படி கான்கிரீட் அடுக்கு-அடுக்குகளை டெபாசிட் செய்கிறது. கட்டமைப்பை அச்சிட அடுக்குகளுக்கு இடையே பிணைப்பை உறுதி செய்ய விரைவாக கடினமாக்கும் கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | உங்கள் உறவினர்களின் பணம் வங்கியில் இருக்கிறதா? இனி அதை எடுப்பது சுலபம்
அது தொடர்பான வீடியோவையும் ட்விட்டரில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்து கொண்டார்.
The spirit of Aatmanirbhar Bharat!
India’s first 3D printed Post Office.Cambridge Layout, Bengaluru pic.twitter.com/57FQFQZZ1b
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 18, 2023
வழக்கமான முறையில் கட்டிடத்தை கட்டி முடிக்க ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும் நிலையில், இந்த தொழில் நுட்பத்தின் கீழ் முழு கட்டுமான நடவடிக்கையும் 45 நாட்களில் முடிக்கப்பட்டது. செலவு மற்றும் நேர சேமிப்பு 3D-கான்கிரீட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தை வழக்கமான கட்டிட நடைமுறைகளுக்கு சிறந்த மாற்றாக ஆக்குகிறது. "இந்த இடத்தில் 3டி-அச்சிடப்பட்ட கான்கிரீட் கட்டிடம் கட்டப்பட்டிருப்பது ஒரு சிறந்த முயற்சி. இது ஒரு தொழில்நுட்ப புரட்சி. ஐஐடி மெட்ராஸ் இதில் அற்புதமான வேலைகளைச் செய்துள்ளது. இந்தத் தொழில்நுட்பம் பிரதானமாக மாறும் போது, இந்தத் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்வதில் இதுபோன்ற பல முயற்சிகளைக் காண்போம் என வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த தபால் நிலையத்தின் கட்டுமான செலவு வழக்கமான கட்டிடம் கட்டுவதை விட சுமார் 30 முதல் 40 சதவீதம் குறைவாக உள்ளது என்பதால், இந்த முன்னோடித் திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்காலத்தில் அஞ்சல் துறையில் இன்னும் இதுபோன்ற சில கட்டிடங்களைத் கட்ட திட்டமிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட அவர், இந்தியா தனது சொந்த 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கும் என்று யாரும் நினைத்ததில்லை என்றும் கூறினார். "இந்தியா அதன் சிக்கலான தொலைத்தொடர்பு சாதனங்களைத் தயாரிக்கும் என்று யாரும் நினைத்ததில்லை" என்றார்.
மேலும் படிக்க | குறைந்த முதலீட்டில் பம்பர் வருமானம்... லட்சங்களை அள்ளித் தரும் டாய் பிஸினஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ