சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் -அமெரிக்கா!

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றத்திற்கு பின்னர், நாட்டில் உள்ள மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

Last Updated : Dec 13, 2019, 11:39 AM IST
சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் -அமெரிக்கா! title=

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றத்திற்கு பின்னர், நாட்டில் உள்ள மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம் தொடர்பான, இந்திய மாநிலங்களின் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதால், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப நாட்டில் உள்ள மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்., "குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான முன்னேற்றங்களை நாங்கள் உன்னிப்பாக பின்பற்றி வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் சட்டத்தின் கீழ் சமமான சிகிச்சை ஆகியவை எங்கள் இரு ஜனநாயக நாடுகளின் அடிப்படைக் கொள்கைகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப தனது மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க அமெரிக்கா இந்தியாவை வலியுறுத்துகிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டம், மக்களவையில் திங்கள்கிழமை, ராஜ்யசபாவில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது, இதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை ஜனாதிபதியால் கையெழுத்தானது.

குடியுரிமைச் சட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக வடகிழக்கில் மக்களின் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

ஏற்கனவே சில நாடுகளில் இருந்து இந்தியாவில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை குடியுரிமைச் சட்டம் விரைவாக பரிசீலிக்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் தனது குடிமகனைக் கணக்கிடுவதற்கும் சரிபார்ப்பதற்கும் உரிமை உண்டு என்றும், பல்வேறு கொள்கைகளின் மூலம் தனிச்சிறப்பைப் பயன்படுத்துவதாகவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Trending News