பிரபலத்தின் BMW கார் மோதி சைக்கிளில் சென்றவர் பலி...

டெல்லியின் பிரதான சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவரை, விஜபி ஒருவரின் சொகுசு மோதியதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 27, 2022, 08:12 PM IST
  • காரின் டயர் வெடித்துவிட்டதாக ஓட்டுநர் வாக்குமூலம்.
  • மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
பிரபலத்தின் BMW கார் மோதி சைக்கிளில் சென்றவர் பலி...  title=

சுபேந்து சாட்டர்ஜி (50) டெல்லி மஹிபால்பூர் மேம்பாலம் அருகே இன்று சைக்கிளில் சென்றுகொண்டிரு்தார். அப்போது, அவ்வழியாக வந்த BMW கார், சைக்கிளில் பலமாக மோதியுள்ளது. 

இதில், சாட்டர்ஜி பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | இந்த 50 ரூபாய் நோட் உங்களிடம் இருந்தால், நீங்களும் கோடீஸ்வரராக ஆகலாம்

சாட்டர்ஜி, குருகிராம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அங்கிருந்து டெல்லியின் தௌலா குவான் பகுதிக்கு அவர் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காரின் டயர் திடீரென வெடித்ததில், தனது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரிடம் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஓட்டுநர் குறித்த தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. 

மேலும், கார் நம்பர் பிளேட்டை பார்க்கும்போது,  விஜபி நம்பர் பிளேட் என தெரியவருகிறது. 'டெல்லி கண்டோண்மண்ட் வாரியம், நிதிக்குழு தலைவர்' என காரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, காரை வேகமாக ஓட்டி, உயர் சேதம் விளைவித்ததாக ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். BMW காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் படிக்க | ஹே எப்புடறா! 500 ரூபாய் நோட்டை 20 ரூபாயாக மாற்றிய ரயில்வே பணியாளர் - ஜாக்கிரதை மக்களே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News