CAA-க்கு எதிரான தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறுத்தி வைப்பு!

இந்தியக் குடியுரிமைத் திருத்தச்சட்டத் திருத்தத்தற்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது!!

Last Updated : Jan 30, 2020, 10:54 AM IST
CAA-க்கு எதிரான தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறுத்தி வைப்பு! title=

இந்தியக் குடியுரிமைத் திருத்தச்சட்டத் திருத்தத்தற்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது!!

குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் 5 அமைப்புகள் சார்பில் 6 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. UN-ன், மனித உரிமைகள் ஆணையம் கடந்த மாதம் விடுத்த அறிவிப்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் அடிப்படையில் பாகுபாட்டுடன் இருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும் இந்தச் சட்டம் சட்டம், சர்வதேச மனித உரிமை விதிகளுக்கும், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே 2005 ஆண்டு நிறைவேற்றப்பட்ட மனித உரிமை ஒப்பந்தத்திற்கும் எதிராக இருப்பதாகவும் ஐரோப்பிய எம்பிக்கள் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய எம்பிக்கள் குழுவினரின் முயற்சிக்கு இந்தியா கண்டம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற தலைவர் டேவிட் மரியா சசோலிக்கு (david maria sassoli), மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த திங்கள் கிழமை அனுப்பிய கடிதத்தில், ‘ஒரு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட சட்டம் குறித்து, இன்னொரு நாடாளுமன்றம் தீர்ப்பளிப்பது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், ஜனநாயக நாடுகளில், ஒரு நாடாளுமன்றத்தின் எம்.பி.க்கள், மற்றொரு நாட்டின் நாடாளுமன்றத்தின் இறையாண்மை முறையை மதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை விமர்சிக்கும் கூட்டுத் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடத்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்த 6 குழுக்களில், இ சி ஆர் எனப்படும் ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்தக் குழு என்ற குழு தனது தீர்மானத்தை வாபஸ் பெற்றுள்ளது. இதையடுத்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் வரும் மார்ச் மாதம் வரை தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மார்ச் மாதத்தில் பிரதமர் மோடியின் ஐரோப்பிய பயணத்தின் போது, உடன் செல்லவிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், குடியுரிமைச் சட்டத்திருத்தம் குறித்து நேரடியாக விளக்கம் பெறலாம் என சில எம்பிக்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 

 

Trending News