"கடவுளின்" காலில் விழுந்து ஆசி வாங்கிய யுவராஜ் சிங்!!!!!

Last Updated : May 11, 2016, 11:54 AM IST
"கடவுளின்" காலில் விழுந்து ஆசி வாங்கிய யுவராஜ் சிங்!!!!! title=

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி விசாகபட்டணத்தில் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதில் வார்னர் மற்றும் ஷிகர் தவான், யுவராஜ் ஆகியோர் சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் வெகு விரைவில் தங்கள் விக்கெட்டுக்களை இழந்து பரிதாபமான நிலையில் தோற்றனர்.
 
இரு அணிகளின் வீரர்களும் போட்டி முடிந்ததும் பெவிலியன் திரும்பினர். அப்போது பவுண்டரி லைனில் நின்றபடி இரு அணி வீரர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் சச்சின். யுவராஜ் சிங் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரைப் பார்த்ததும் அவரிடம் சென்று காலில் விழுந்து ஆசி பெற்றார். யுவராஜ் சிங் காலில் விழுந்ததும் வெட்கத்தில் நெளிந்த சச்சின் வேகமாக யுவராஜை பிடித்து நிறுத்தினார்.

இப்போட்டியில் யுவராஜ் சிங் 39 ரன்களைக் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News