ஐதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமான டயர் வெடித்தது!

திருப்பதியில் இருந்து ஐதராபாத்துக்கு இண்டிகோ 6இ 7117 ரக விமானம் ஒன்று நேற்று இரவு 8.55 மணியளவில் புறப்பட்டு சென்றது. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரவு 10.25 மணியளவில் விமானம் தரையிறங்கியபொழுது விமானத்தின் டயர் வெடித்தது. 

Last Updated : Mar 29, 2018, 08:25 AM IST
ஐதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமான டயர் வெடித்தது! title=

திருப்பதியில் இருந்து ஐதராபாத்துக்கு இண்டிகோ 6இ 7117 ரக விமானம் ஒன்று நேற்று இரவு 8.55 மணியளவில் புறப்பட்டு சென்றது. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரவு 10.25 மணியளவில் விமானம் தரையிறங்கியபொழுது விமானத்தின் டயர் வெடித்தது. 

ஐதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் டயர் வெடித்த நிலையில் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 

இந்த விமானத்தில் 77 பேர் பயணித்துள்ளனர்.  அதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஜாவும் ஒருவர்.  விமானத்தின் டயர் வெடித்த நிலையில், பயணிகள் பதற்றம் அடைந்தனர். ஆனால் விபத்து ஏதும் ஏற்படாததால் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். 

ஐதராபாத் விமான நிலையத்தின் ஓடுதளம் சிறிது நேரம் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து 6 விமானங்கள் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

Trending News