மே-23ல் குமாரசாமி பதவியேற்பு! ராகுல் காந்திக்கு நேரில் அழைப்பு!

டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்தித்து பேசியுள்ளார்!  

Last Updated : May 21, 2018, 07:56 PM IST
மே-23ல் குமாரசாமி பதவியேற்பு! ராகுல் காந்திக்கு நேரில் அழைப்பு! title=

கர்நாட்டகாவின் புதிய முதல்வராக வரும் புதன் அன்று பதவியேற்கவுள்ள குமாரசுவாமி அவர்கள் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி அவர்களை சந்தித்து பேசியுள்ளார்!

நடந்து முடிந்த கர்நாட்டக சட்டமன்ற தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக-விற்கு எதிராக ஆட்சியமைக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைக்கிறது.

கர்நாடகாவின் முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநில தலைவர் HD குமாரசாமி புதன் அன்று முதல்வராக பதவியேற்கின்றார். இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். 

மேலும் இந்த பதவி விழாவின் போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து, குமாரசாமி மே-23ல் கர்நாடாக முதல்வராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

Trending News