காலா படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆக வேண்டும்: லைக்கா தரப்பு எச்சரிக்கை!

ரஜினியின் காலா படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆக வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று லைக்கா தரப்பு படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Last Updated : Mar 22, 2018, 06:05 PM IST
காலா படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆக வேண்டும்: லைக்கா தரப்பு எச்சரிக்கை!  title=

ரஜினியின் காலா படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆக வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று லைக்கா தரப்பு படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தில் ரஜினியுடன், ஹுமா குரேசி, நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி 'காலா' படத்தின் டீசர் காட்சிகள் கடந்த மார்ச் 2-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் புதிய படங்கள் தணிக்கைச் சான்றிதழ் பெறத் தடையில்லாச் சான்று, விளம்பர ஒப்புதல் கடிதம் இரண்டும் வழங்குவதைத் தயாரிப்பாளர்கள் சங்கம்நிறுத்தி வைத்திருந்தனர். 

இந்நிலையில், ஏப்ரல் 27 அன்று ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த ரஜினி நடித்திருக்கும் காலா படத்துக்கு இச்சான்றிதழ் வழங்கத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து மறுத்துவந்தது.

இதனால் காலா ரிலீஸ் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி பல சர்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் லைக்கா தரப்பினர் காலா தரப்புக்காக பேசிய பிரதிநதி கடந்த மாதமே சென்சார் செய்வதற்காக தயாரிப்பாளர் சங்கத்திடம் கடிதம் கேட்டிருந்தோம், ஆனால் இதுநாள் வரை எங்களுக்கு கடிதம் தரவில்லை, சென்சார் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்க கடிதம் முக்கியம் என்பது அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தெரியும்.

எங்களுக்கு முதலில் தயாரிப்பாளர் சங்கம் கடிதம் கொடுங்கள், சொன்ன தேதியில் காலா ரிலீஸ் ஆக வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று கூறி கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தினர்.

Trending News