COVID-19 Marriages: கொரோனாவால் ஒரு கோடி குழந்தை திருமணம் நடக்கலாம் UNICEF கவலை

யுனிசெஃப் வெளியிட்டுள்ள புதிய பகுப்பாய்வு உலக அளவில் அதிர்ச்சிகளை அதிகரித்துள்ளது. குழந்தைத் திருமணங்கள் உலகின் மிகப் பெரிய சுமைகளில் ஒன்று. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் ஒரு கோடி குழந்தை திருமணங்கள் கூடுதலாக நடைபெறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 9, 2021, 11:04 AM IST
  • குழந்தைத் திருமணங்கள் உலகின் மிகப் பெரிய சுமைகளில் ஒன்று
  • கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒரு கோடி குழந்தை திருமணங்கள் நடைபெறலாம்
  • அதிக அளவு குழந்தை திருமணங்கள் நடைபெறும் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று
COVID-19 Marriages: கொரோனாவால் ஒரு கோடி குழந்தை திருமணம் நடக்கலாம் UNICEF கவலை title=

புதுடெல்லி: யுனிசெஃப் வெளியிட்டுள்ள புதிய பகுப்பாய்வு உலக அளவில் அதிர்ச்சிகளை அதிகரித்துள்ளது. குழந்தைத் திருமணங்கள் உலகின் மிகப் பெரிய சுமைகளில் ஒன்று. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் ஒரு கோடி குழந்தை திருமணங்கள் கூடுதலாக நடைபெறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

குழந்தைத் திருமணம் என்ற மோசமான நடைமுறைய அகற்றுவதில் பல ஆண்டுகால ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை இது பாதிக்கும் என்ற அச்சங்கள் அதிகரித்துள்ளன.
உலக அளவில், குழந்தை திருமணங்கள் அதிக அளவு நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

கோவிட் -19 (COVID-19) குழந்தைத் திருமணத்திற்கு எதிரான முன்னேற்றத்திற்கான அச்சுறுத்தல் என்று சர்வதேச மகளிர் தினத்தன்று யுனிசெஃப் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்படுள்ளது. கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனால், பள்ளி மூடல்கள், பொருளாதார சீர்குலைவு (economic stress), மன அழுத்தம், சேவை சீர்குலைவுகள், திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் தொற்றுநோயால் ஏற்படும் பெற்றோர் இறப்புகள் ஆகியவை சிறார்களின், அதிலும் குறிப்பாக சிறுமிகளின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்யும் அபாயம் அதிகரிப்பதாக யுனிசெஃப்பின் அறிக்கை கவலை தெரிவிக்கிறது.  

Also Read | சேலையை இப்படியும் விளம்பரப்படுத்த முடியுமா? Super Idea 

வங்கதேசம், பிரேசில், எத்தியோப்பியா, இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளில் தான் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். கடந்த 10 ஆண்டுகளில், இந்த 5 நாடுகள் உட்பட உலகம் முழுவதும் 2.50 கோடி பெண் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. குழந்தை திருமணம் செய்த மூன்று பேரில் ஒருவர், இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

COVID-19 பாதிப்புக்கு முன்னர், சமீபத்திய தசாப்தத்தில் பல நாடுகளில் குழநதை திருமணங்களில் கணிசமான குறைவு இருந்தது. ஆனால், அது தலைகீழாக மாறி, அடுத்த தசாப்தத்தில் 100 மில்லியன் பெண்கள், குழந்தை திருமணம் செய்துக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்படலாம். கடந்த பத்து ஆண்டுகளில், உலகளவில் குழந்தை திருமண விகிதம் 15 சதவீதம் குறைந்துள்ளது.

Also Read | Gold rates today: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News