விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்திய சிபிஎஸ்இ பாடப்புத்தகம்!!

மூன்றாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடப்புத்தக்கத்தில் நடிகர் விஜய்யின் பாரம்பரிய வேஷ்டி சட்டை அணிந்த புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

Last Updated : Dec 13, 2017, 09:59 AM IST
விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்திய சிபிஎஸ்இ பாடப்புத்தகம்!! title=

மூன்றாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடப்புத்தக்கத்தில் நடிகர் விஜய்யின் பாரம்பரிய வேஷ்டி சட்டை அணிந்த புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் அன்டிகர் விஜய். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த வருடம் மெர்சல் படம் ரீலீஸுக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், சிபிஎஸ்இ மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வேஷ்டி சட்டை தமிழர்களின் பாரம்பரியம் என்ற ஒரு தலைப்பில் விஜய்யின் வேஷ்டி சட்டை புகைப்படம் இடம் பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையைப் பற்றிய அந்த வரியில் வேஷ்டி சட்டை தான் தமிழர்களின் பாரம்பரிய உடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, வேலாயுதம் படத்தில் விஜய் வேஷ்டி சட்டையுடன் நடந்து வரும் போட்டோவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending News