ஏப்ரல் 1: ITR முதல் TDS வரை உங்கள் வாழ்வில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் இதோ

வருமான வரி தொடர்பான விதிகள் ஏப்ரல் 1 முதல் மாறப்போகின்றன. இது 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இடையே இந்த மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.   

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 24, 2021, 04:55 PM IST
  • மாத சம்பளம் வாங்கும் வகுப்புக்கு ITR தாக்கல் செய்வது இன்னும் எளிதாகிவிடும்
ஏப்ரல் 1: ITR முதல் TDS வரை உங்கள் வாழ்வில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் இதோ  title=

வருமான வரி தொடர்பான விதிகள் ஏப்ரல் 1 முதல் மாறப்போகின்றன. இது 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இடையே இந்த மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாத சம்பளம் வாங்கும் வகுப்புக்கு ITR தாக்கல் செய்வது இன்னும் எளிதாகிவிடும். மாற்றப்பட்ட இந்த விதிகள் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும். மேலும், TDS விலக்கு தொடர்பான விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.

EPF-ல் என்ன மாற்றம்

பட்ஜெட் 2021 இல், நடுத்தர வர்க்கம் மற்றும் சம்பள வர்க்கத்திற்கு சிறப்பு அறிவிப்பு எதுவும் இருக்கவில்லை. 75 வயதைத் தாண்டிய ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கான அறிவிப்புகள் இருந்தன. வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதிகமான மக்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்கிறார்கள். இதற்காக, 2021 வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் மிகவும் வலுவான ஏற்பாட்டைச் செய்தது. ஐ.டி.ஆர் தாக்கல் விதிகள் சம்பள வகுப்புகளுக்கு எளிதாக்கப்பட்டுள்ளன. இனி அவர்கள் ITR தாக்கல் செய்யும்போது எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்காது. அரசாங்கத்தால் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றங்களைப் பற்றி வருமான வரி செலுத்தும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

முன் நிரப்பப்பட்ட ஐடிஆர் படிவங்கள்

2021 ஏப்ரல் 1 முதல், தனிப்பட்ட முறையில், ITR படிவத்தை தாக்கல் செய்வபர்களுக்காக, இந்த செயல்முறை அரசாங்கத்தால் எளிதாக்கப்பட்டுள்ளது. 

எல்.டி.சி திட்டம்

எல்.டி.சி 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் லாக் டவுன் காரணமாக எல்.டி.சி வரியைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லாக்டௌனின் போது யாரும் எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் மக்களால் எல்.டி.சி யின் நன்மைகளைப் பெற முடியவில்லை. இதனால், அரசாங்கம் அதன் காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

ALSO READ: LPG கேஸ் சிலிண்டர்களில் ரூ .700 கேஷ்பேக் வேண்டுமா? இதை உடனே செய்யுங்கள்!

ரிட்டர்ன் தாக்கல் செய்ய தேவையில்லை

மூத்த குடிமக்கள் (Senior Citizens) அதாவது 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமானத்தை தாக்கல் செய்ய தேவையில்லை. ஓய்வூதியம் மற்றும் நிலையான வைப்புத்தொகையின் வட்டியை சார்ந்து இருப்பவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டது.

ஐடி பிரிவு 206 ஏபி, TDS அதிகரிக்கும்

ஐ.டி.ஆர் தாக்கல் செய்யாதவர்களுக்கு, குறிப்பாக வணிக வர்க்க மக்களுக்கு அரசாங்கம் விதிகளை மிகவும் கண்டிப்பாக ஆக்கியுள்ளது. இதற்காக Section 206-க்கான ஏற்பாட்டை அரசாங்கம் செய்துள்ளது. இதன்படி, ஒரு நபர் ITR தாக்கல் செய்யாவிட்டால், ஏப்ரல் 1, 2021 முதல், TDS இரட்டிப்பாக வசூலிக்கப்படும். புதிய விதிகளின்படி, TDS அதிகரிக்கும். ஏப்ரல் 1, 2021 முதல், TDS மற்றும் TCL விகிதங்கள் 10-20 சதவீதமாக இருக்கும். இது பொதுவாக 5-10 சதவீதமாக உள்ளது. ITR தாக்கல் செய்யாதவர்கள் மீது அரசாங்கம், இரட்டிப்பு விகிதத்தில் TDS-ஐ வசூலிக்கும். 

ALSO READ: Salaried Class-க்கு நல்ல செய்தி: பணி மாற்றத்தின் போது இனி gratuity-யையும் மாற்றிக்கொள்ளலாம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News