சம்பளம் தராத IT கம்பெனி முதலாளியை கடத்தி சித்திரவதை செய்த ஊழியர்!!

தங்களின் வேலைக்கான ஊதியத்தை தரமறுத்த ஐடி கம்பெனி முதலாளியை கடத்திச் சென்று  சித்திரவதை செய்த ஊழியர்கள் கைது!!

Last Updated : Apr 11, 2019, 04:49 PM IST
சம்பளம் தராத IT கம்பெனி முதலாளியை கடத்தி சித்திரவதை செய்த ஊழியர்!! title=

தங்களின் வேலைக்கான ஊதியத்தை தரமறுத்த ஐடி கம்பெனி முதலாளியை கடத்திச் சென்று  சித்திரவதை செய்த ஊழியர்கள் கைது!!

பெங்களூருவில் உள்ள சுஜய் என்ற 23 வயது இளைஞன் ஹல்சூர் பகுதியில் ஒரு தகவல் தொழிற்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவங்கியுள்ளார். ஆனால், அந்த தொழில் மிகவும் நஷ்டத்தில் சென்றுள்ளது. இந்நிலையில், வேறு வழியில்லாமல் அதை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த சூழ்நிலையில் அவரிடம் வேலை செய்த 7 பேருக்கு கடைசி 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை. 
 
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். ஆனால் அவர் விஷம் சாப்பிட்டதை அறிந்த அவரது வீட்டினர் மற்றும் நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றினர். 

இதையடுத்து, காவல்துறையினர் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கேட்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவரிடம் வேலை செய்த 7 பேரும் சேர்ந்து இவரை கடத்தி ஒரு பண்ணை வீட்டிற்கு கூட்டி சென்று அங்கு அவரை கட்டிவைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் மனமுடிந்த அவர் வேறுவழியின்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரில் 4 பேரை கைது செய்துள்ளனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர். 

 

Trending News