ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் தீபாவளி பரிசு.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

Diwali Gift For Free Ration Card Holder: 3.37 லட்சம் குடும்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேரடி பலன்கள் வழங்கப்படும். எனவே ரேஷன் கார்டுதாரர்களின் கணக்கில் ரூ.490 வழங்கப்படும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 9, 2023, 03:44 PM IST
  • தீபாவளி பண்டிகைக்கு இலவச அரிசி மற்றும் சர்க்கரைக்கு இணையான ரொக்க பணம்.
  • குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் ரூ.490 செலுத்தப்படும்.
  • புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயன்பெறுவார்கள்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் தீபாவளி பரிசு.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள் title=

ரேஷன் அட்டைகளுக்கு அளவில்லா தீபாவளி பரிசு 2023: நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்து, அரசின் இலவச ரேஷன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில் மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கீழ், தீபாவளிக்கு (Diwali 2023) 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு சமமான ரொக்கத் தொகை பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்படும்.

புதுச்சேரி அரசு: ரொக்க பணம்:
இதன் மூலம் புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயன்பெறுவார்கள். இதற்கான தெளிவான உத்தரவுகளை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை இயக்குநர் எஸ்.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த 3.37 லட்சம் குடும்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கு (Ration Card Holder) நேரடிப் பலன்கள் வழங்கப்படும். மேலும் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் ரூ.490 செலுத்தப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புதுச்சேரி அரசு (Government of Puducherry) தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மற்றொரு முக்கியமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதாவது, அரசு அதிகாரிகள் குடும்பங்களுக்கு இந்த உதவிகள் கிடைக்காது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்துக்காக மொத்தம் ரூ.16.52 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னதாக அரிசி, சர்க்கரை ஆகியவை அரசு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இனி தீபாவளி பண்டிகைக்கு இலவச அரிசி மற்றும் சர்க்கரைக்கு இணையான ரொக்க பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Diwali 2023: தீபாவளி கூட்ட நெரிசலை தடுக்க சிறப்பு ரயில்கள்! டிக்கெட் புக் செய்வது எப்படி?

அசாம் அரசு: மானிய விலையில் தேயிலை வழங்க தயார்:
அசாம் அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு (Free Ration) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உண்மையில், 2024 முதல் மானிய விலையில் தேயிலை வழங்கப்படும். அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டத் தொழில் 200 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது. 2024 முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ ரூ. 100-150க்கு வழங்க அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா அறிவித்தார்.

உத்தரப்பிரதேச அரசு: ஏழைகளுக்கு இலவச தானியங்கள் விநியோகம்:
உத்தரப்பிரதேசத்தில் தீபாவளிக்கு முன்னதாக ஏழைகளுக்கு இலவச தானியங்கள் வழங்கப்படும். நவம்பர் 20ஆம் தேதி வரை உணவு தானியங்கள் வழங்கப்படும். நவம்பர் 5ஆம் தேதி முதல் இலவச கோதுமை அரிசி வழங்கப்படும். 6 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களும் ஆயுஷ்மான் அட்டையின் பலனைப் பெறுவார்கள்.

நவம்பர் 4ம் தேதி வரை ரேஷன் பொருட்களை வசூலிக்கவும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கவும் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நவம்பர் மாதத்தில் விவசாயிகளுக்கு 21 கிலோ கோதுமையும், 14 கிலோ அரிசியும் வழங்கப்படும். தகுதியுள்ள கிரிஹஸ்தா யோஜனா அட்டைதாரர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 3 கிலோ அரிசியும் 2 கிலோ கோதுமையும் வழங்கப்படும்.

மேலும் படிக்க | பான்-ஆதார் இல்லாமல் தங்கம் வாங்கலாம்.. ஆனா ஒரு கண்டிஷன், உடனே தெரிஞ்சிக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News