Festive Season Offer: எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் தங்கம் பரிசு!!

வாடிக்கையாளரின் கவனத்திற்கு! கேஸ் சிலிண்டர் புக் செய்தால் தங்கம் வெல்லும் வாய்ப்பு! அரிய சலுகை அக்டோபர் 16 வரை மட்டுமே!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 8, 2021, 10:24 AM IST
  • பண்டிகைக் கால சிறப்பு தள்ளுபடி!
  • சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் சலுகை
  • எல்.பி.ஜி சிலிண்டர் புக் செய்து தங்கம் பெறுங்கள்!
 Festive Season Offer: எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் தங்கம் பரிசு!! title=

புதுடெல்லி: திருவிழாக்காலம் என்றாலே கொண்டாட்டம் தான். எங்கும் ஆஃபர், எதிலும் ஆஃபர்! ஆனால், கேஸ் சிலிண்டர் புக் செய்தால் அதற்கு சலுகை கிடைக்கும் தெரியுமா? அதுவும் தங்கமான பொன் ஆஃபர் இது...

Paytm வழங்கும் நவராத்திரி சலுகையாக, சமையலுக்கு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்தால் தங்கப் பரிசு பெறலாம். அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கும் இந்த சிறப்புச் சலுகை, அக்டோபர் 16 வரை கிடைக்கும்.

அக்டோபர் மாதம் என்றாலே, இந்தியா முழுவதும் பண்டிகை காலம் தொடங்கிவிடும். இந்த முறை திருவிழாக்கள் தொடங்குவதற்கு முன்பு, மீண்டும் கேஸ் சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. அக்டோபர் 6ம் தேதி புதன்கிழமையன்று, எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜியின் விலையை ரூ .15 உயர்த்தியுள்ளன. 

ஆனால் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் , வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறு ஆறுதலாக இந்த சலுகை கிடைக்கிறது.  

Also Read | பிக் பில்லியன் டேஸ் விற்பனை: மெகா தள்ளுபடி சலுகைகளை வழக்கும் ஃப்ளிப்கார்ட்

சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதன் மூலம் தங்கத்தை வெல்ல முடியும். ஆன்லைன் கட்டண நிறுவனமான Paytm (Paytm) சிறப்பு நவராத்திரி கோல்ட் புக்கிங் கேஸ் சிலிண்டரை (special Navratri Gold bookings gas cylinder) வழங்குகிறது. 7 அக்டோபர் 16ம் தேதி வரை சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளர்களில் 5 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 10,001 ரூபாய் மதிப்புள்ள Paytm டிஜிட்டல் தங்கம் பரிசாகக் கிடைக்கும்.

Paytm செயலியில் (Paytm app) 'புக் கேஸ் சிலிண்டர்' வசதியைப் பயன்படுத்தி கேஸ் சிலிண்டர் முன்பதிவுகளுக்கான கட்டணம் செலுத்தும் போது இந்த சலுகை பொருந்தும். இதுவரை இந்த வழியில் சிலிண்டரை பதிவு செய்யாதார்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும்.

கூடுதலாக, எல்லா பயனர்களுக்கும்ம் ஒவ்வொரு முன்பதிவுக்கும் 1000 கேஷ்பேக் புள்ளிகள் வரை உறுதியான ரிவார்டுகள் கிடைக்கும். இது சிறந்த பிராண்டுகளின் அற்புதமான ஒப்பந்தங்கள் மற்றும் ரிவார்டு வவுச்சர்களுக்குப் பயன்படும். இந்த 'நவராத்திரி தங்கம்' சலுகை, இண்டேன், ஹெச்பி கேஸ் மற்றும் பாரத் கேஸ் (Indane, HP Gas and Bharat Gas) ஆகிய 3 முக்கிய எல்பிஜி நிறுவனங்களின் சிலிண்டர் முன்பதிவுக்கு பொருந்தும்.

Also Read | ஆதார் அட்டையில் உள்ள போட்டோ நன்றாக இல்லையா; நொடியில் மாற்றலாம்..!!

Paytm சமீபத்தில் சிலிண்டர் முன்பதிவு அனுபவத்தை இன்னும் சிறப்பானதாக ஆக்கியுள்ளது, இது சில புதிய அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தைக் கண்காணிக்க உதவுகிறது,

மேலும் சிலிண்டர் தீர்ந்துவிடும் காலத்தை கணித்து தானியங்கி நுண்ணறிவு நினைவூட்டல் என்ற (Automated Intelligent Reminders for refills) முறையில் தானாகவே உங்களுக்கு சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற விஷயத்தை நினைவுபடுத்துகிறது. 

எரிவாயுவை முன்பதிவு செய்ய, பயனர்கள் 'புக் கேஸ் சிலிண்டர்' என்ற தெரிவுக்குச் செல்ல வேண்டும். இங்கே உங்கள் எரிவாயு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து, மொபைல் எண் / எல்பிஜி ஐடி / நுகர்வோர் எண்ணை உள்ளிட்டு, உங்களுக்குப் பிடித்தமான பேடிஎம் வாலட் போன்ற கட்டண முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்துங்கள்.

Paytm UPI, Card, Net Banking அல்லது Paytm Postpaid போன்றவற்றின் மூலம் இப்போது முன்பதிவு செய்து அடுத்த மாதம் பணம் செலுத்தலாம் என்ற சலுகையும் கிடைக்கிறது. இது வழக்கமான சிலிண்டர் புக்கிங் முறைதான். புக்கிங் செய்த சிலிண்டரை உங்கள் முகவர் வீட்டில் விநியோகிப்பார்.

Also Read | Great Indian Festival Sale: கவர்ச்சிகரமான சலுகை - தள்ளுபடிகள் குறித்து விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News