Budget expectations: வருமான வரி விலக்கு 6 லட்சம் ரூபாயாக உயரும்! மக்களின் எதிர்பார்ப்பு

Income Tax New Slab In 2023-24: இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகரிக்குமா? நம்பிக்கையில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிதியமைச்சர்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 28, 2023, 11:17 AM IST
  • வருமான வரி விலக்கு அதிகரிக்குமா?
  • நம்பிக்கையில் இருக்கும் நடுத்தர வர்க்கம்
  • எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிதியமைச்சர்?
Budget expectations: வருமான வரி விலக்கு 6 லட்சம் ரூபாயாக உயரும்! மக்களின் எதிர்பார்ப்பு title=

Union Budget 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை எதிர்வரும் பிப்ரவரி முதல் நாளன்று தாக்கல் செய்கிறார். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான அரசின், கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் அனைவரின் எதிர்பார்ப்புகளும் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகரிக்குமா? நம்பிக்கையில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ற எதிர்பார்ப்பு மெய்யாகுமா?

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, நிதியமைச்சரின் உரையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் மக்களின், வருமான வரி உச்சவரம்பு, விலக்கு தொடர்பான எதிர்பார்ப்புகள் இவை.

நடுத்தர வர்கத்தினரின் பட்ஜெட் எதிர்பார்ப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முழு பட்ஜெட்டிலும் வருமானத்திற்கான ஆதாரங்களாக காட்டப்படுவதில் முக்கிய பங்கு வருமான வரிக்கு உண்டு என்பதால், இந்த விஷயத்தில் நிதியமைச்சர் அதிக கவனம் செலுத்துவார். அதிலும், மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், மக்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கும் என்றும் அனைவரும் நம்புகின்றனர்.

மேலும் படிக்க | மக்களவை தேர்தல் இன்று நடந்தால்... ஆட்சியை கைப்பற்றுமா பாஜக - குட் நியூஸ் யாருக்கு?

வருமான வரி புதிய ஸ்லாப்

வருமான வரியில் புதிய ஸ்லாப் 6 லட்சம் வரை வரி இல்லை என்றும், ரூ.1 லட்சத்திற்கு வரி விலக்கு பெற முடியும் என்று இருக்கும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நாட்டில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டும் மத்திய அரசு பட்ஜெட்டில் வரி விலக்கு அளிக்கும் என்ற நடுத்தர வர்கத்தினரின் எதிர்பார்ப்பு, நிதர்சனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம். 

இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாக, நிதி அமைச்சகம் வருமான வரி தொடர்பாக மிகுந்த கண்டிப்பைக் காட்டி வருகிறது. வரிவிலக்கு அளிக்காதது குறித்த கேள்விகளுக்க் பதிலளித்த நிதியமைச்சர், புதிய வரி விதிக்காமல் இருப்பதும் வரிவிலக்கு என்று தெரிவித்திருந்தார் என்பது அனைவருக்கும் நினைவில் இருந்தாலும், தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட்டில்,வரி விலக்குகள் தொடர்பான அறிவிப்புக்கு 99% வாய்ப்புகள் உண்டு என மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

மேலும் படிக்க | Budget 2023: அல்வா கிளறிய நிதியமைச்சர்! பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிளறப்படுவது ஏன்!

பணவீக்கம் அதிகரித்துள்ளதால் சாமானிய மக்களுக்கு நிவாரணமாக அரசு வரிவிலக்கு அளிக்கலாம். இது கூடுதல் செலவினங்களை சமாளிக்க, சாமானியர்களுக்கு உதவியாக இருக்கும்.  

6 லட்சம் வரை வரி விதிக்கப்படாது?

5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு இருக்கும் வரிவிலக்கு, 6 லட்சமாக உயர்த்தப்படலாம். 20 சதவீத வரம்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு, அது பெரும்பாலான மக்களுக்கு பலனளிக்கலாம்.

நிலையான விலக்கு வரம்பு அதிகரிப்பு

இது தவிர, சம்பளம் பெறும் வகுப்பினருக்கான நிலையான விலக்கு வரம்பை அரசாங்கம் அதிகரிக்கலாம் என்றும், அது 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக அதிகரிக்கலாம். மேலும், வட்டிக்கு வரி விலக்கு 25 ஆயிரமாக உயரலாம்.

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட் விவரங்களை உடனடியாக பெற இதை செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News