30 ஆண்டுகளாக தேநீர் மட்டும் குடித்து உயிர்வாழும் பெண்மணி...

குளிர் காலங்களில் ஒரு கோப்பை தேநீர் என்பது பிடித்தமான உணவாக இருக்கலாம், ஆனால் வாழ்நாள் முழுவதிற்கும் தேநீர் மட்டும் தான் உணவு என்றால்., உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

Last Updated : Jan 12, 2019, 11:26 AM IST
30 ஆண்டுகளாக தேநீர் மட்டும் குடித்து உயிர்வாழும் பெண்மணி... title=

குளிர் காலங்களில் ஒரு கோப்பை தேநீர் என்பது பிடித்தமான உணவாக இருக்கலாம், ஆனால் வாழ்நாள் முழுவதிற்கும் தேநீர் மட்டும் தான் உணவு என்றால்., உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

சத்தீஷ்கர் மாநிலம் கொரியா பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக வெறும் தேநீர் மட்டும் குடித்து உயிர்வாழ்ந்து வருகின்றார். கொரியாவில் 'சாய் வாலி சாச்சி' என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பில்லி தேவி தான் இந்த வினோத செயலில் ஈடுப்பட்டு வருபவர்.

கொரியா மாவட்டத்தின் பாரதியா கிராமத்தை சேர்ந்த பில்லி தேவி, தனது 11-வது வயதில் இருந்து தேநீர் தவிர்து மற்ற ஆகாரத்தை எடுத்துக்கொள்வதை கைவிட்டுள்ளார். 

இதுகுறித்து பில்லி தேவியில் தந்தை ரதி ராம் தெரிவிக்கையில்., பில்லி தேதி தனது 6-ஆம் வகுப்பில் பள்ளியில் அழைத்து சென்ற சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர் அதுநாள் முதல் திட உணவு, தண்ணீர் உட்கொள்வை மறுத்துள்ளார். ஆரம்பத்தில் சில ரொட்டி துண்டுகள், பால் எடுத்துக்கொண்ட பில்லி தேவி பின்னர் சில மாதங்களிலேயே கருப்பட்டி தேநீர் மட்டும் எடுத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுவந்துள்ளார்.

பில்லி தேவியின் இந்த நடவடிக்கையை கண்டு அதிர்ந்த குடும்பத்தார், மருத்துவர்களை அனுகியுள்ளனர். எனினும் பில்லி தேவி எவ்வித நோயாலும் பாதிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுநாள் வரை தேநீர் மட்டும் உட்கொண்டு ஆரோக்கியமாக, நோய் இன்றி வாழ்ந்து வரும் பில்லி தேவியை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தீவிர சிவ பக்தையான பில்லி தேவி, இறை வழிபாடு, தேநீர் என ஒரு சிறு வட்டத்திற்குள் தனது வாழ்க்கையினை அடைத்து வருகின்றார்.

Trending News