தினமும் நமது தலைமுடியை அலசலமா என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும், சிலரோ ஒரு வாரம் கடந்தும் தலைமுடியை அலசாமல் இருப்பார்கள், சிலரோ தினமும் தலைமுடியை அலச விரும்புபவர்கள். இப்படி பல தரப்பினர் இருக்கின்றனர், உண்மையாகவே தலைமுடியை எப்போது அலச வேண்டும் என்பது பற்றி நமக்கு தெளிவாக தெரியாது. உங்கள் தலைமுடியின் அமைப்பு மற்றும் தரம் இயல்பானதாக இருக்கும்பட்சத்தில், தினமும் நீங்கள் தலைக்கு குளிப்பதை விட சில நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் உங்கள் முடியை அலசலாம். அதிக தூசி மற்றும் அழுக்குகளை ஈர்க்கும் மிக நுண்ணிய முடி கொண்டவர்கள், அடிக்கடி வேலை செய்து அதிக வியர்வையை உற்பத்தி செய்பவர்கள், குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் வசிப்பவர்கள் மற்றும் வேலை செய்ய வேண்டியவர்களுக்கு அடிக்கடி தங்களது தலைமுடியை அலச வேண்டிய நிலை ஏற்படும். தலைக்கு எப்போது குளிக்க வேண்டும் என்கிற சந்தேகம் ஒருபக்கம் இருந்தாலும், ஷாம்பூவை எப்போது பயன்படுத்த வேண்டும் என்கிற சந்தேகமும் இருந்து வருகிறது.
மேலும் படிக்க | நீரழிவு நோயை இயற்கையாகவே கட்டுப்படுத்தும் உணவுகள்!
இது சம்மந்தமாக பல ஆய்வுகளும் நடத்தப்பட்டு இருக்கிறது, நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகளின்படி, அதிகப்படியான ஷாம்புகளால் முடி சேதமடைகிறது என்று காலம்காலமாக கூறப்பட்டு வரும் கருத்துக்கள் அறிவியல் ரீதியாக மறுக்கப்பட்டுள்ளது. லேசான க்ளென்சர் மற்றும் உங்கள் சருமத்திற்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டதா ஷாம்பூக்களை நீங்கள் தேர்ந்தெடுப்பது நல்லது. ஒருவர் தனது தலைமுடியை எப்போது வேண்டுமானாலும் அலசலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது. அகலமான பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்துதல் மற்றும் ஈரமான முடியை சீப்பால் சீவுவது மற்றும் ஈரமாக உள்ள தலைமுடியை மின் உலர்த்திகள் வைத்து உலர வைப்பது போன்றவற்றை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
முடி உலர்த்தியை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தினால் அது உங்கள் தலைமுடியை ஈரப்பதம் இல்லாமல் உலர செய்வதோடு, முடியை உடைந்துவிடும். தலையில் அதிகளவு அழுக்குகள் நிரம்பியிருந்தால் உங்கள் உச்சந்தலையை மட்டும் ஷாம்பூவால் நன்கு அலசுங்கள், மற்ற இடங்களில் அழுக்ககள் இல்லையென்றால் அங்கு நீங்கள் ஷாம்பூக்களை பயன்படுத்த வேண்டாம். நீங்கள் முடிக்கு கண்டிஷனரை எப்போது பயன்படுத்தினாலும் உங்கள் தலைமுடியின் முனைகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள், ஒருபோதும் கண்டிஷனிங் செய்யும் போது உங்கள் உச்சந்தலையில் அதாவது தலைமுடியின் வேர்களில் படும்படியாக செய்து விடாதீர்கள், இது முடி உதிர்விற்கு வழிவகுக்கும். ஒரே இரவில் உங்கள் தலைமுடிக்கு ஒரு முறைக்கு மேல் எண்ணெய் தடவாதீர்கள், அதிக எண்ணெய் பயன்படுத்தாதீர்கள். மேலும் உங்கள் தலைமுடி தடிமனாகவும், நன்றாகவும், சுருளாகவும் இருந்தால், அந்த குறிப்பிட்ட அமைப்புக்காக வடிவமைக்கப்பட்ட பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ