வட மாநிலங்களில் கோடை காலத்திலும் ஒரு முறை நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. இது சைத்ர நவராத்திரி என அழைக்கப்படுகின்றது. இந்த ஆண்டு இந்த நவராத்திரி ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஜோதிட சாஸ்திரப்படி சைத்ரா நவராத்திரியின் போது 2 முக்கிய கிரகங்களின் சேர்க்கை நடைபெற உள்ளது. இது தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சைத்ர நவராத்திரியில் கிரகங்களின் சேர்க்கையின் பலன் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சனி மற்றும் செவ்வாயின் ராசி மாற்றம்
ஜோதிட சாஸ்திரப்படி சைத்ரா நவராத்திரியின் போது கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கும். இன்னும் சொல்லப்போனால் இந்த முறை சைத்ரா நவராத்திரியின் போது வேறு சில யோகங்களும் உருவாகின்றன. இவை சில ராசிக்காரர்களுக்கு வருடம் முழுவதும் தொல்லை தரக்கூடிய வகையில் உள்ளன.
கிரகங்களின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசியையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. சைத்ரா நவராத்திரியில் சனி மற்றும் செவ்வாய் சஞ்சாரம் குறிப்பாக ராசிகளில் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
மேலும் படிக்க | ஏப்ரல் 12 கேது பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன விளைவுகள் இருக்கும்?
- ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, சனி-யும் செவ்வாயும் மகர ராசியில் பிரவேசிப்பார்கள். சனி மற்றும் செவ்வாய் இரண்டும் எதிரி கிரகங்கள். அத்தகைய சூழ்நிலையில், இவற்றின் மாற்றத்தால் ஏற்படும் யோகம் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
- சனி செவ்வாய் சேர்க்கையின் போது கன்னி, கடகம், தனுசு ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- மேஷம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
- இது தவிர மீனத்தில் சூரியன், புதனுடன் மேஷத்தில் சந்திரன், ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது என இந்த வகையில் கிரகங்களின் நிலை இருக்கும்.
- இப்படிப்பட்ட நிலையில் செவ்வாய் மற்றும் சனி பகவான் எந்த ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன் தரப் போகிறார்களோ, அவர்களுக்கு அதிகப்படியான தாக்கம் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றம், குபேரனின் சிறப்பு அருள் பெறப்போகும் ராசிக்காரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR