டிஜிட்டல் பரிவர்த்தனை... இந்த ‘சிறு’ தவறுகளால் பணத்தை பறிகொடுக்காதீர்கள்!

டிஜிட்டல்  பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், டிஜிட்டல் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஒரு சிறிய கவனக்குறைவு இருந்தால் கூட நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிபோகும் நிலை ஏற்படலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 8, 2023, 03:25 PM IST
  • டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் பல நன்மைகள் உள்ளன.
  • கரன்சி நோட்டுகளை எடுத்து செல்ல தேவையில்லை.
  • உலக அளவில் இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடம் பிடித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை... இந்த ‘சிறு’ தவறுகளால் பணத்தை பறிகொடுக்காதீர்கள்! title=

இந்தியாவில் டிஜிட்டல் பர்வர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடம் பிடித்துள்ளது. பெரும்பாலான நகரங்களில், UPI மூலம் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் பல நன்மைகள் உள்ளன. கரன்சி நோட்டுகளை எடுத்து செல்ல தேவையில்லை. இந்த நாட்களில் வியாபாரிகளிடமிருந்து கடைக்காரர்கள் என்ற முறையில் சிறிய அல்லது பெரிய தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். தற்போது எல்லோரும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், சைபர் குற்றவாளிகளும் மிகவும் ஆக்டிவ் ஆக உள்ளனர். அவர்கள் தனிப்பட்ட தரவுகளைப் பெற தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் செய்திகளை அனுப்பி ஏமாற்றக்கூடிய நபர்களை சிக்க வைக்கிறார்கள். 

 டிஜிட்டல் பேமெண்ட்  செயலிகள்

டிஜிட்டல் மோசடி விகிதம் முந்தையதை விட இப்போது சுமார் 28 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பதை புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. இருப்பினும், வேகமான உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பணம் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பல டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ்கள் உள்ளன. இந்த செயலிகளை பயன்படுத்த, நமது வங்கிக் கணக்கு மற்றும் கார்டு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். எனவே, அது நம்பகமானது என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதியாக தெரிந்து கொண்ட பின்னரே செயலியைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். 

பாதுகாப்பான செயலிகள்

எங்கள் நிதித் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் செயலிகளை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மோசடி பரிவர்த்தனைகள் தடுக்கப்படும். நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ் உங்கள் தகவலை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறது என்பதை அறிய, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்கவும்.  ஆனால், நிதி பரிவர்த்தனைகளுக்கு வங்கி அல்லது UPI செயலியை பயன்படுத்தும் போது எந்தச் சூழ்நிலையிலும்  பாதுகாப்பாற்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம். 

மேலும் படிக்க | YONO for Every Indian: புதிய அவதாரம் எடுத்துள்ள SBI YONO... முழு விபரம் இதோ!

இலவச வைஃபை நெட்வொர்க்

பல இணைய குற்றவாளிகள் மொபைல் போன்களை ஹேக் செய்ய இலவச வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். உங்கள் மொபைல் ஃபோனில் பேமெண்ட் ஆப்ஸைப் பயன்படுத்த இரட்டை நிலை பாதுகாப்பு அமைப்பை அமைக்கவும். செயலியை தொடங்கவும் பரிவர்த்தனைகளைச் செய்யவும் வெவ்வேறு கடவுச்சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும். முக்கியமாக பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த வேண்டும். 

எளிதான கடவுச்சொற்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பலர் எளிய கடவுச்சொற்களை தேர்வு செய்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் இது சரியல்ல. டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ் மூலம் பணம் செலுத்தும் போது, நான்கு அல்லது ஆறு இலக்க PIN தேவை. எந்த சூழ்நிலையிலும் இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். பலர் 1234 போன்ற கடவுச்சொல்லை தேர்வு செய்கிறார்கள். இது பாதுகாப்பானது அல்ல. சிறந்த பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை தவறாமல் மாற்ற வேண்டும். 

QR குறியீடுகள்

கடைகளில் பணம் செலுத்த QR குறியீடுகள் உள்ளன. ஒருவர் அங்குள்ள குறியீடுகளை ஸ்கேன் செய்து, நொடிகளில் பணம் செலுத்தலாம். சில நேரங்களில் மோசடியான QR குறியீடுகளும் இருக்கலாம். தெரியாமல் ஸ்கேன் செய்தால் நமது போனில் உள்ள அனைத்து தகவல்களும் சைபர் குற்றவாளிகளை சென்றடையும். எனவே, எந்த குறியீடு ஸ்கேன் செய்யப்படுகிறது என்பதை இருமுறை சரிபார்க்கவும். விவரங்களுக்கு கடைக்காரரிடம் கேளுங்கள். அதன் பிறகே பரிவர்த்தனையை முடிக்கவும்.

மேலும் படிக்க | Google Pay பயனர்கள் UPI ஆக்டிவேட் செய்ய ஆதாரை பயன்படுத்தலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News