திருத்தணியில் சூரசம்ஹாரம் எப்போதுமே கிடையாது! காரணம் தெரியுமா?

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடான திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று மட்டுமல்ல, என்றுமே சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. காரணம் என்ன தெரியுமா?  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 9, 2021, 04:21 PM IST
  • முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு திருத்தணி
  • திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை
  • கந்தசஷ்டி விழாவில், முருகனின் சினம் தணிக்க மலரஞ்சலி செய்யப்படும்
திருத்தணியில் சூரசம்ஹாரம் எப்போதுமே கிடையாது! காரணம் தெரியுமா? title=

சென்னை: முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி ஆலயம். முருகனின் புகழ்பெற்ற இந்த ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா என பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவது  வழக்கம். 

கந்த சஷ்டி விழாவின் போது முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். ஆனால், முருகனின் முக்கியமான தளங்களான அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை என்பதும், அதற்கான காரணமும் தெரியுமா?

திருச்செந்தூரில் சூரனை வதைத்ததால் சூரசம்ஹாரம் உலகம் முழுவதும் உள்ள முருகனின் கோயில்களில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். ஆனால், திருத்தணியில் மட்டும் நடைபெறாது. சூரபத்மனை வதம் செய்த முருகன், அங்கிருந்து வந்து திருத்தணி மலையில் சினம் தணித்தார். 

Read Also | சஷ்டியில் முருகனுக்கு காணிக்கை 270 gm தங்கச் செயின்  

எனவே, திருத்தணியில் சூரசம்ஹாரத்திற்கு பதிலாக உற்சவராக இருக்கும் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. எனவே தான், திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகனுக்கு திருத்தணியில் சினம் தணிக்க மலர்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

சூரசம்ஹாரம்

மலைகளில் சிறந்தது திருத்தணிகை என கந்த புராணம் சொல்கிறது. திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே நோய்நொடிகள் நீங்கும். அதற்கான காரணத்தையும் புரானமே சொல்கிறது.

தேவர்களின் துயரத்தை தீர்க்க சூரனை வதைத்து போர் முடித்த தலமாக இருந்தாலும், திருச்செந்தூரில் முருகனின் சினம் அடங்கவில்லை. தணிகை ம்லை வந்த பிறகே சண்முகனின் கோபம் தீர்ந்ததால் தணிகை தலம், சினத்தை தணித்த தலமாக போற்றப்படுகிறது.

அதேபோல, குறமகள் வள்ளியை கரம் பிடிப்பதற்காக, முருகன் வேடர்களுடன் போர் செய்த பிறகு, திருத்தணிகைக்கு வந்த பிறகே, முருகன் சீற்றம் தணிந்து அமர்ந்தார். எனவே தணிகையை நினைத்தால், துயரங்கள் தணியும் என்பது நம்பிக்கை.

திருத்தணிகை அறுபடை வீடுகளில் ஒன்றாக புகழ் பெற்றாலும், முருகனின் சினம் தணிந்து மனம் குளிர்வித்த தலம் மட்டுமல்ல, தேவர்களின் அச்சம் தீர்த்த தலம், பக்தர்களின் கவலைகளை தணிக்கும் தலம் என்பதால், சூரசம்ஹாரத்தன்று முருகனுக்கு மலரஞ்சலி செய்து பக்தர்கள் மனம் மகிழ்கின்றனர்.

Also Read | பழநி முருகன்-பூம்பாறை வேலப்பர் நவபாஷண சிலைகளின் வித்தியாசம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News