இன்றைய யுகம் டிஜிட்டல் யுகம் என்றாலும், இன்னும் பணத்தை அதிகம் பயன்படுத்தும் பலர் இருக்கிறார்கள். ரொக்கப் பயன்பாடானது சிலருக்கு பரிவர்த்தனைகளைச் செய்வதை எளிதாக்குகிறது. இருப்பினும், உங்களிடம் உள்ள பணம் உண்மையானதா அல்லது கள்ள நோட்டா என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பாக்கெட்டில் உள்ள ரூ.100 நோட்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது என்பதை அறிந்து கொள்ளலாம். உண்மையில், உண்மையான நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை மக்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். உங்களிடம் உள்ள நோட்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொள்வது என்பதை அறிந்து கொள்ளும் வழி இதோ...
ரூபாய் நோட்டில் உள்ள தெரெட் என்னும் நூலை ஆராய்தல்
செக்யூரிட்டி த்ரெட் என்பது கரன்சி நோட்டில் பதிக்கப்பட்ட செங்குத்து நூல். நோட்டை சாய்க்கும்போது, அதன் நிறம் மாறுவதோடு, அதில், நோட்டின் மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும். நூலின் நிறத்தை சரிபார்த்து, வளைக்கும் போது நிறத்தை மாற்றுவதை உறுதிப்படுத்தவும். நூல் நிறம் மாறாமல் இருந்தாலோ அல்லது தெரியாமல் போனாலோ அது போலி நோட்டாக இருக்க வாய்ப்புள்ளது.
வாட்டர்மார்க்கை சரிபார்க்கவும்
வாட்டர்மார்க் என்பது உட்பொதிக்கப்பட்ட படமாகும், அதன் மீது ஒளி படும் போது தான் தெரியும். மகாத்மா காந்தியின் படத்தின் வாட்டர்மார்க் மற்றும் நோட்டின் மதிப்பை சரிபார்க்கவும். வாட்டர்மார்க் காணவில்லை அல்லது மங்கலாக இருந்தால், அந்த நோட்டு கள்ள நோட்டாக இருக்க வாய்ப்புள்ளது.
நுண் எழுத்துக்களைக் கவனிக்கவும்
மைக்ரோ-எழுத்து என்பது பூதக்கண்ணாடியில் மட்டுமே தெரியும் அம்சமாகும். கரன்சி நோட்டில் உள்ள மைக்ரோ எழுத்துகள் தெளிவாக இருக்க வேண்டும். எழுத்துக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்க வேண்டும் மற்றும் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். எழுத்துக்கள் மங்கலாகவோ அல்லது தெளிவாக இல்லை என்றால், அந்த நோட்டு கள்ள நோட்டாக இருக்க வாய்ப்புள்ளது.
அச்சுத் தரத்தைச் சரிபார்க்கவும்
கரன்சி நோட்டின் அச்சுத் தரம் துல்லியமானதாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். கோடுகள் மிருதுவாகவும் வண்ணங்கள் பிரகாசமாகவும் இருக்க வேண்டும். அச்சு தரம் குறைவாக இருந்தால், அந்த நோட்டு கள்ள நோட்டாக இருக்க வாய்ப்புள்ளது.
காகித தரம்
காகிதத்தின் தரத்தை சரிபார்க்கவும், கரன்சி நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்தப்படும் காகிதம் சாதாரணமானது அல்ல, ஏனெனில் இது 75 சதவீதம் பருத்தி மற்றும் 25 சதவீதம் லினன் கலந்த கலவையாகும்.
Intaglio அச்சு உள்ளதா என பார்க்கவும்
Intaglio அச்சிடுதல் என்பது ரூபாய் நோட்டில் தொட்டால் உணரும் படியான ஒரு அச்சிடும் செயல்முறையாகும். அதாவது உங்கள் விரல்களால் அதன் மேல் நகர்த்தும் போது அதனை நன்றாக உணர உணர முடியும். கரன்சி நோட்டில் உள்ள இன்டாக்லியோ பிரிண்டிங் தெளிவாகவும் கூர்மையாகவும் இருக்க வேண்டும். அச்சிடுதல் மிக சாதாரணமானதாகவும், தொட்டால் எந்த விதமான வித்தியாசம் இல்லாமலும் இருந்தால், அந்த நோட்டு கள்ள நோட்டாக இருக்க வாய்ப்புள்ளது.
வரிசை எண்
ஒவ்வொரு கரன்சி நோட்டுக்கும் ஒரு தனித்துவமான வரிசை எண் உள்ளது. ரூபாய் நோட்டில் உள்ள வரிசை எண்ணைச் சரிபார்த்து, அது மீண்டும் ஒரே எண்ணாக இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும். ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட எண்ணில் வரிசை எண் விடுபட்டிருந்தால் அல்லது எண்கள் மாறுபட்டிருந்தால், அந்த நோட்டு கள்ள நோட்டாக இருக்க வாய்ப்புள்ளது.
உண்மையான ரூபாய் நோட்டுடன் ஒப்பிடுக
போலி நாணயத் தாளைச் சரிபார்ப்பதற்கான எளிதான வழி, அதே மதிப்பின் உண்மையான நோட்டுடன் ஒப்பிடுவதுதான். உண்மையான நோட்டுடன் நீங்கள் சந்தேககப்படும் ரூபாய் நோட்டை வைத்து, அவற்றை அருகருகே ஒப்பிட்டுப் பார்க்கவும். நிறம், அமைப்பு அல்லது அச்சுத் தரத்தில் ஏதேனும் வேறுபாடுகளைக் கவனியுங்கள். ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் அந்த நோட்டு போலியாக இருக்க வாய்ப்புள்ளது.
கள்ள நோட்டுகள் (Fake Note)சந்தையில் புழக்கத்தில் அதிகம் காணப்படுகின்றன. இதனால், கள்ள நோட்டுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி (RBI) அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தகவல்களை வழங்கி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ