வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா சோப்ரா -See inside!

இணையத்தை கலக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனசின் நிச்சியதார்த்த புகைப்படம்..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2018, 03:33 PM IST
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா சோப்ரா -See inside!  title=

இணையத்தை கலக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனசின் நிச்சியதார்த்த புகைப்படம்..! 

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனசும் காதலித்து வருவதாக நெடுநாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில், இவர்கள் இருவருக்கு லண்டனில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், தான் ஒப்ந்தமாகியுள்ள திரைப்பட படபிடிப்பு நிமித்தமாக லண்டன் சென்றிருந்த பிரியங்கா லண்டனிலிருந்து சமீபத்தில் டெல்லி திரும்பினார். 

அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன் அவர் தன் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்தார். இந்த மோதிரம் அவரது நிச்சயதார்த்த மோதிரமாக இருக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டது. 

இதன் காரணமாக பிரியங்கா சோப்ரா, தமது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி மறைத்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது. எனினும் இந்த மோதிரம் குறித்து பிரியங்கா தரப்பில் இருந்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், திருமண நிச்சயதார்த்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோனசின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்த சடங்கு நடப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

 

Trending News