ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் செய்தி!! அரசின் அறிவிப்பால் பம்பர் லாபம்!!

Ration Card Update: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா? அப்படியென்றால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2023, 03:19 PM IST
  • முழு ரேஷன் வழங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கடைகளை மின்னணு பாயின்ட் ஆப் சேல் சாதனங்கள் மற்றும் மின்னணு தராசுகளுடன் இணைக்கும் வகையில் விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • புதிய விதிகளின்படி, ரேஷன் பொருட்களை எடை போடுவதில் எந்த இடையூறும் இருக்காது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் செய்தி!! அரசின் அறிவிப்பால் பம்பர் லாபம்!! title=

புதுடில்லி: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாக, மத்திய, மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உதவ பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உங்களிடமும் ரேஷன் அட்டை இருந்தால், இந்த பதிவை நீங்கள் கவனமாக படிக்க வேண்டும். ஏனென்றால், அரசு தற்போது வகுத்துள்ள ஒரு விதி உங்கள் மனதை மகிழ்விக்கும் வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் நல்ல பலனை அடைவார்கள். 

ஏழைகளுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கு அவற்றின் பலன்களும் அதிக அளவில் கிடைத்து வருகின்றன. நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், புதிய விதியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இல்லையெனில் நஷ்டத்தை நீங்கள் தாங்க வேண்டியிருக்கும். இதற்கு நீங்கள் சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

முழு ரேஷன் வழங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்

மத்திய மோடி அரசாங்கம், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகின்றது. இதில் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுகிறார்கள். யாருக்கும் ரேஷன் பொருட்கள் குறைவாக கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு விதிகளை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் எடையில் விற்பனையாளர் தவறு செய்தால், அது குறித்து மக்கள் புகார் அளிக்கலாம். அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி, அரசு வெளியிட்ட புதிய தகவல்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கார்டுதாரர்களுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் கடைகளை மின்னணு பாயின்ட் ஆப் சேல் சாதனங்கள் மற்றும் மின்னணு தராசுகளுடன் இணைக்கும் வகையில் விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, ரேஷன் பொருட்களை எடை போடுவதில் எந்த இடையூறும் இருக்காது.

இந்த விதி விரைவில் அமல்படுத்தப்படும்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஆன்லைன் மின்னணு புள்ளிகளுடன் (ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயிண்ட்) இணைக்கும் பணி நிச்சயமாக நடக்கும் என கருதப்படுகிறது. இதனால் இனி ரேஷன் பொருட்களின் எடையில் குளறுபடிகளுக்கு இடமில்லை. அதன் பிறகு மக்களுக்கு குறைவான ரேஷன் பொருட்கள் கிடைக்கும் பிரச்சனை இருக்காது. இதற்கு முன்னரும் இதற்காக அரசு பல பெரிய முடிவுகளை எடுத்தது, ஆனால் நிலைமை சீரடையவில்லை. ஆனால், இனி அப்படி நடக்காது. 

இதற்குப் பிறகும் உங்கள் ரேஷன் பொருட்களின் அளவு குறைவாக இருந்தால், அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் புகாரையும் பதிவு செய்யலாம். ரேஷன் விநியோக முறையை சரிசெய்ய அரசாங்கம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மெலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், புதிய விதி நாடு முழுவதும் அமல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News