அடேங்கப்பா...இந்தியாவிலேயே இந்த ஊரில் தான் சம்பளம் அதிகம் - முழு விவரம்

Salary Hike In India: சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பல வேலைகளின் சம்பளம், கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரி சம்பள உயர்வில் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 26, 2023, 06:02 PM IST
  • பெங்களூரு முந்தைய ஆண்டை விட 7.79 சதவீத சம்பள வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.
  • ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை ஊழியர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது.
  • ஆனால், கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு விகிதம் குறைந்துள்ளது.
அடேங்கப்பா...இந்தியாவிலேயே இந்த ஊரில் தான் சம்பளம் அதிகம் - முழு விவரம் title=

Salary Hike In India: உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் மீதான அச்சம் காரணமாக, ஒருபுறம் பணிகள் நெருக்கடியில் உள்ளன. அதுமட்டுமின்றி, பலரின் சம்பளம் கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், இந்தியாவின் சில நகரங்களில், அதிக சம்பளம் கொடுத்து வேலை கொடுக்கப்படுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?.

ஆம், இதில் மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் டெல்லி போன்ற நகரங்கள் முக்கிய இடங்களை . இந்த நகரங்களில் உள்ளவர்கள் இந்த ஆண்டு அதிக சம்பளம் கொடுத்து பணியமர்த்தப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இதில் காணலாம்.

டீம்லீஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2022-23 நிதியாண்டுக்கான வேலைகள் மற்றும் சம்பள முதன்மை அறிக்கையின்படி, மற்ற அனைத்து நகரங்களிலும், பெங்களூரு முந்தைய ஆண்டை விட 7.79 சதவீத சம்பள வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, சம்பளத்தை அதிகரிக்க பல சாதகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு ஆகியவை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சராசரி சம்பளத்தில் பெரும் சரிவை பதிவு செய்துள்ளன. 

மேலும் படிக்க | Google Payயில் RuPay கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்... வழிமுறை இதோ..!!

2023 ஆம் ஆண்டில் பல தொழில்களில் இந்தியா 3.20 சதவீதம் முதல் 10.19 சதவீதம் வரை சம்பள உயர்வை பதிவு செய்ய உள்ளது என்று இந்த புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட சற்று குறைவானது எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிரந்தர மற்றும் தற்காலிக வேலைகளின் சம்பள அமைப்பு குறித்தும் அறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் அவர்கள் கவனம் செலுத்துவது விற்பனை மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளை அதிகரிக்க வழிவகுத்தது.

2023ஆம் ஆண்டில் பல தொழில்கள் "குறிப்பிடத்தகுந்த வேலைகள்" (Hot Jobs) என்று குறிப்பிட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வேலைகள் அதிக சம்பளத்தை வழங்குகின்றன. ஏறக்குறைய பாதி தொழில்கள் புதிய நிலைகளை உருவாக்கினாலும், இது எதிர்காலத்திற்கு நல்லது. பெங்களூருவில் தொலைத்தொடர்பு துறையில் ஒரு மேலாளரின் ஊதியம் 10.19 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. அதிக சம்பள உயர்வு உள்ள வேலை இதுவாகும். 

இவர்களின் சம்பளமும் அதிகரிப்பு

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை ஊழியர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது. இப்பணியில் 9.3 சதவீதம் உயர்வு காணப்பட்டுள்ளது. இத்துறையில் சராசரி சம்பள உயர்வு 8.03 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் அதிகபட்சமாக 10.19 சதவீத உயர்வு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது.

கடந்த 5 சம்பளம் அதிகரிப்பு

கடந்த ஆண்டு சம்பளத்தில் சரிவு இருந்தபோதிலும், ஐந்து ஆண்டுகளில் சராசரி சம்பள உயர்வில், குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளது எனலாம். சுகாதாரத்துறையில் அதிகபட்சமாக 20.46 சதவீதமும், கல்வியில் 51.83 சதவீதமும் சம்பளம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், விருந்தோம்பல், ஆட்டோமொபைல் மற்றும் அது சார்ந்த தொழில்கள், இ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்கள் மற்றும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற தொழில்களில் சம்பளம் குறைந்துள்ளது.

மேலும் படிக்க | June 1, 2023: ஜூன் 1 முதல் பல விதிகளில் மாற்றம், சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News