24 Novembe 2021: ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

கிரகங்களின் இயக்கத்துக்கு ஏற்ப பலன்களும் மாறிக் கொண்டே இருக்கும் என்பதால், தினசரி பலனை தெரிந்துக் கொண்டு செயல்படுவது நலம் தரும்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2021, 06:01 AM IST
  • ஆன்லைன் பர்வர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் இவர்
  • உயர்கல்விக்கு வாய்ப்பு அதிகமுள்ள ராசிக்காரர்
  • மீன ராசிக்காரர்கள் பழைய நினைவுகளை கிளறவேண்டாம்
24 Novembe 2021: ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்  title=

Zodiac Sign: நவம்பர் 24, 2021 புதன்கிழமை: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நமது ஜாதகத்தில் எந்த கிரகம் - நட்சத்திரம் எந்த வீட்டிற்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். கிரகங்களின் இயக்கம் மாறி வருவதால், பலன்கள் அனுதினமும் மாறிக் கொண்டே இருக்கும். ஒருநாள் அதிர்ஷ்டமான தினம் என்றால், மறுநாள் மந்தமான நாளாக இருக்கலாம். எனவே, தினசரி நமது ராசிக்கான பலனை அறிந்துக் கொண்டு, புரிந்து செயல்பட்டால் எந்நாளும் நன்னாளே...

மேஷம்: நல்ல தகவல் கிடைக்கும். வீட்டின் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சில புதிய முடிவுகளை எடுக்கலாம். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். தந்தையின் பணிகளில் உங்கள் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியதாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படுவார்கள்.

ரிஷபம்: யார் என்ன சொன்னாலும் அதை மனதில் வைக்காதீர்கள். வார்த்தைகள் என்பது மனம் போன போக்கில் சொல்லப்பட்டாலும், அது மனதை பாதித்தாலும், ஓரளவுக்கு மேல் அது நம்மைக் கட்டுப்படுத்த விட்டுவிடக்கூடாது. வியாபாரத்தில் அமோகமான பலன்கள் உண்டாகும். வேலை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.

மிதுனம்: புதன்கிழமை உங்கள் நாள் சிறப்பாக இருக்கும். உங்கள் மனதில் இருப்பதை தைர்யமாக வெளிப்படுத்துங்கள். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். பெண்கள் தங்கள் தொழிலைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சொத்து வாங்குவதற்கு மிகவும் நல்ல நாள். பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும்.

கடகம்: இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். ஜவுளி வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து முதலீடு செய்யலாம். உறவினர்களுடன் சுமுகமான உறவு தொடரும். பொறுப்பான வேலையில் அலட்சியமாக இல்லாமல் இருந்தால், வேலையில் வெற்றி பெறுவீர்கள்.  

சிம்மம்: உங்கள் ஆளுமையில் புதிய ஈர்ப்பு ஏற்படும். உங்களின் திறமை மற்றும் புரிதலால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் திடீரென்று நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் கருத்தை அதிகாரிகளின் முன் வைக்க இதுவே சரியான நேரம்.

கன்னி: உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். வியாபாரத்தில் உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று அதிக லாபம் பெறலாம். நண்பர்களின் உதவியால் கடினமான காரியங்கள் எளிதாக முடிவடையும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டி வரும். மாணவர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற வெற்றி நிச்சயம் கிடைக்கும்.  

ALSO READ | ஆடம்பரமாய் வாழ நினைக்கும் இந்த 4 ராசிகள்

துலாம்: பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வியாபாரத்தில் உங்கள் வாழ்க்கை துணைக்கு கீழ்ப்படிய வேண்டியிருக்கும். அரசாங்க விதிகளால், வியாபாரிகள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சமூக வலைதளங்கள் மூலம் புதிய நண்பர் கிடைப்பார்.  

விருச்சிகம்: புதிய வழியில் இருந்து பணவரவு வர வாய்ப்பு இருக்கிறது. புதிய திட்டத்தில் வேலை செய்வதன் மூலம் நீங்கள் நிறைய கற்றுக் கொள்வீர்கள். இளைஞர்கள், உயர்கல்விக்கு முயற்சிக்க உகந்த நாள். பெற்றோருடன் ஷாப்பிங் செல்லலாம்.

தனுசு: உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் நேர்மறையான எண்ணங்களால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வங்கித் துறையினருக்கு உத்யோகத்தில் லாபகரமான காலம். நிலுவையில் இருந்த சொத்துப் பிரச்சனைக்கு தீர்வு காண நல்ல நாள் இன்று.

மகரம்: கடவுள் அருளால் பல காரியங்கள் முடியும். வாழ்க்கைத்துணையின் மூலமாக சொத்து தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் பலன் தரும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பயனடைவீர்கள். செலவுகளைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். முக்கிய வீட்டு வேலைகளில் உதவும் வாய்ப்பு இன்று உங்களுக்கு உண்டு.  

கும்பம்: வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் துவண்டு போக மாட்டீர்கள். ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய உங்கள் சிந்தனை மாறலாம். வருமானத்தை அதிகரிக்க சில நல்ல வாய்ப்புகளையும் பெறலாம். ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள்.

மீனம்: புதிய வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் வலிமை மற்றும் தைரியத்தின் பலத்தால் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் தென்படும். இளைஞர்களுக்கு தொழில் தொடர்பான புதிய தகவல்கள் கிடைக்கும். கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களால் மனதில் வருத்தம் எழும், எனவே, பழைய நினைவுகளை இன்று கிளறிப்பார்க்க வேண்டாம். அது,  தேவையற்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.

ALSO READ | இன்றைய தினத்தன்று மறந்துகூட இதனை செய்துவிடாதீர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News