செலவே இல்லாமல் ஏசியை சுத்தம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

Tips To Clean Air Conditioner: உங்களிடம் உள்ள ஏசியை எப்படி எவ்வித செலவும் இல்லாமல் சுத்தம் செய்வது என்பதை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 29, 2024, 06:07 PM IST
  • கோடை காலத்தில் ஏசி ரொம்ப முக்கியமானது.
  • ஏசி நீண்ட நாள் நிலைத்திருக்க அதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • ஏசி அழுக்காக இருந்தால் உங்களுக்கு உடல் சார்ந்த பிரச்னையும் வரலாம்.
செலவே இல்லாமல் ஏசியை சுத்தம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! title=

Tips To Clean Air Conditioner In Summer: வீட்டில் அத்தியாவசிய பொருள்கள் என்னவென்று ஒரு பத்தாண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தால் அடிப்படையான வீட்டு உபயோக பொருள்கள்தான் அதிகம் இருக்கும். டிவி, பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்டவையும் அதிகம் இருந்திருக்கும், ஆனால் ஏசி என்பதை பலருக்கும் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மிக அத்தியாவசிய வீட்டு உபயோக சாதனத்தில் ஏசிதான் முக்கிய இடத்தை பிடிக்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் ஏசி முதன்மையான இடத்தை பிடிக்கிறது. 

கோடை வெயிலை சமாளிப்பதற்கும், இரவு வெக்கையை தவிர்ப்பதற்கும் வீட்டில் மட்டுமின்றி அலுவலகம் உள்ளிட்ட பல பொது இடங்களில் ஏர் கண்டீஷனர் பயன்படுத்தப்படுகிறது. ஏசியின் பயன்பாடு தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்துவிட்டதையே இது குறிக்கிறது. அந்த வகையில், ஏசி வைத்திருப்போர் இந்த கோடை காலத்தில் பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஏசியும் காரும் ஒன்று...

குறிப்பாக, ஏசியும் காரும் ஒன்று. ஏனென்றால், இரண்டை வாங்கிய பின்னரும் நன்றாக மெயின்டெயின் செய்ய வேண்டும். ஏசி வைத்திருப்பவர்கள் அதனை மூடிவைத்திருக்காவிட்டால், கோடை காலத்தில் நீங்கள் பயன்படுத்தும்போது தூசித் தட்டி, நன்கு சுத்தம் செய்தே பிறகே பயன்படுத்த வேண்டும். மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் பெரும்பாலும் அந்த ஏசியை பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள்.

மேலும் படிக்க | இரவில் ஏசி பயன்படுத்தும் போது சீலிங் ஃபேனை ஆன் செய்ய வேண்டுமா?

எனவே, அதில் தூசி அதிகம் படிந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில், கோடையில் நீங்கள் அதனை திடீரென பயன்படுத்தும்போது, தூசியும் அதில் இருக்கும் கிருமியும் காற்றில் கலந்து உங்களின் நுரையீரலை பாதித்து தொற்றை உண்டாக்கலாம். தூசி படிந்திருந்தால் ஏசியும் சரியாக இயங்காது.

செலவில்லாமல் சுத்தம் செய்ய வழிமுறைகள்

ரூ.1000 முதல் ரூ.1500 வரை கொடுத்து எளிதாக உங்கள் ஏசியை சர்வீஸ் செய்துகொள்ளலாம். அது தேவைப்படாவிட்டாலும் நீங்களே வீட்டில் உள்ள ஏசியை சுத்தம் செய்துகொள்ளலாம். எனவே, ஏசியை செலவில்லாமல் சுத்தம் செய்வது எப்படி, எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் என்பது குறித்து இதில் காணலாம். 

எப்போது சுத்தப்படுத்த வேண்டும்?

உங்களின் ஏசி நீண்ட காலத்திற்கு நன்கு இயங்க வேண்டும் என்றால் அதனை சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம். எனவே, இரண்டு - மூன்று மாதங்கள் இடைவெளியில் ஏசியை சுத்தப்படுத்துங்கள். ஏசிக்குள் அதிகம் தூசியும் அழுக்கும் சேரும்போது, அதன் வெளிப்புற துவாரங்களிலேயே கறை தெரிய தொடங்கும். அதன் உள்ள இருக்கும் காற்றின் வடிக்கட்டி அதிக அழுக்கு, தூசி காரணமாக கறுப்பு நிறத்தில் மாறிவிடும். 

இந்த அழுக்கும், தூசியும் இருப்பது ஏசி காற்றை அதிகம் குளிர்விக்க இயலாமல் போகும். இந்த சமயத்தில் ஏசியை சுத்தப்படுத்திவிட வேண்டும். அதுமட்டுமின்றி ஏசியில் இருந்து வழக்கத்திற்கு மாறான சத்தமோ அல்லது துர்நாற்றமோ வீசத் தொடங்கினால் உடனடியாக ஏசியை சுத்தப்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏசியை சுத்தப்படுத்தவது எப்படி?

ஏசியை முதல் ஸ்விட்ச் ஆப் செய்துகொண்டு, அதன் வெளிபுற பேனலை ஸ்க்ரூடிரைவர் மூலம் திறந்துகொள்ள வேண்டும். அதன் பின் அதில் இருந்து காற்றின் வடிகட்டியை (Air Fliter) நீக்க வேண்டும்.  உங்களிடம் இருக்கும் பல் துலக்கும் பிரஷ் மூலம் மெதுவாக அதனை சுத்தப்படுத்தவும். அதன்பின், ஒரே ஒருமுறை தண்ணீரில் கழுவிவிட்டு, அதனை காயவைக்க வேண்டும். அதேபோல் எவாப்பரேட்டர் காயிலையும் (Evaporator Coil) பிரஷ் மூலம் சுத்தப்படுத்துங்கள். இவற்றை சுத்தப்படுத்திவைத்த பின், தண்ணீர் காய்ந்ததும் மீண்டும் அதே இடத்தில் பொருத்தில் பேனலை வைத்து மீண்டும் மூடிவிடவும். 

வெளிப்புற யூனிட்டும் முக்கியம்

வெளிப்புற ஏசி யூனிட்டை சுத்தம் செய்ய, அதில் உள்ள பச்சை கவரை நீக்கி அந்த ஃபேனையும் நீக்க வேண்டும். இதை செய்யும் முன் அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளவும். அந்த பேனை மிருதுவான துணியை வைத்து துடைக்க வேண்டும். நல்ல அழுத்தத்தில் வரும் நீர் மூலம் அந்த யூனிட்டை கழுவ வேண்டும். கழுவிய பின்னர் அதனை காயவைத்து மீண்டும் பொருத்தினால் போதும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதனை பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக ஏசி நிபுணர்களின் ஆலோசனையை பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | வழிமுறைகள் : பான் கார்டே வேண்டாம்... CIBIL Score-ஐ ஈஸியா செக் செய்யலாம் - இதை பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News