அசந்து போன அரசு ஊழியர்கள்... மீண்டும் அமலாகிறது பழைய ஓய்வூதிய திட்டம்...?

Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பல்வேறு பலனைகளை அளிக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் இந்த மாநிலத்தில் அமலாவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இது ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 27, 2023, 04:36 PM IST
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் முடிவு.
  • தமிழ்நாட்டில் இதுகுறித்து பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன.
  • அரசுக்கு அதிக நிதிச்சுமை இருக்காது என தகவல்.
அசந்து போன அரசு ஊழியர்கள்... மீண்டும் அமலாகிறது பழைய ஓய்வூதிய திட்டம்...? title=

Old Pension Scheme: கடந்த 2004ஆம் ஜனவரி 1ஆம் தேதி முதல் மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தியது. இதனால், அன்றில் இருந்து அரசு பணியில் சேர்பவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டமும், அதற்கு முன் பணியில் உள்ளவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து பல அதிருப்திகள் அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 

குறிப்பாக, தமிழ்நாட்டிலும் அரசு ஊழியர்கள் தரப்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரி தொடர் கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதில், அரசு பள்ளி ஆசிரியர் சங்கம் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகிறது. அதன் 10 அம்ச கோரிக்கைகளில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதும் ஒரு முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும், உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிகிறது. இருப்பினும், காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளை போன்றே திமுகவும் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்புள்ளதாகவும் கூறப்படுகிகறது. 

இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த பேச்சுகள் வழுவடைந்துள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் உதவியுடன் மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி இப்போதே ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே, ஆளும் கட்சியான பாஜகவும் மறுபுறம் பின்தங்காமல் போட்டிப்போட்டு தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறது. 

மேலும் படிக்க | டபுள் பணம்.. மக்களுக்கு டபுள் ஜாக்பாட்.. அசத்தும் போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம்

சமீப காலமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பால் ஆட்சியை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், அண்டை மாநிலங்களான சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. 2018ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது, ஆனால் பரஸ்பர மோதல் காரணமாக, பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இதில், குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயம் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பழைய ஓய்வூதிய திட்டம் பின்பற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், ஜார்க்கண்டிலும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளது. 

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் கூறினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய பிரதேச மக்களுக்கு ஐந்து விஷயங்களை நிறைவேற்றித் தருவதாக பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் மாற்றம் அலை வீசுகிறது என்றும், சாமானியர்களுடன் இணைந்து அவர்களின் துயரங்களிலும் வலிகளிலும் பங்கேற்பது மட்டுமே தேவை என்றும் அவர் பேசினார். 

பாதகம் இல்லை

மத்தியப் பிரதேச அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால், அதிக நிதிச்சுமை இருக்காது என நிபுணர்கள் கருதுகின்றனர். பழைய ஊழியர்களில் பெரும்பாலானோர் ஓய்வு பெற்று விட்டதாக கூறப்படுகிறது. மாநிலத்தின் 3.35 லட்சம் ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 14 சதவீத பங்கிற்கு சுமார் ரூ.344 கோடி சேமிப்பின் பலன் கிடைக்கும். ஜனவரி 2005க்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தில் 3.35 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர், அவர்கள் ஓய்வூதிய விதிகள், 1972ன் வரம்புக்கு அப்பாற்பட்டவர்கள். 2008ல் ஆசிரியர்களாக மாறிய 2.87 லட்சம் ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. கட்சி சார்பில் மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்றார். ஆனால் காங்கிரஸ் கட்சியும், மாநில மக்களும் ஜோதிராதித்ய சிந்தியாவை மாநிலத்தில் முதலமைச்சராக பதவியேற்க விரும்பினர். அவருடன் ஏராளமான எம்எல்ஏக்கள் இருந்தனர். 2020ஆம் ஆண்டில், ஜோதிராதித்ய சிந்தியா எம்எல்ஏக்களுடன் சேர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டார். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த அரசியல் முன்னேற்றங்கள் காரணமாக, சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். 

மேலும் படிக்க | பாஸ்போர்ட் 7 நாட்களில் வீடு வந்து சேரும்... விண்ணப்பிக்கும் எளிய முறை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News