அபராதம் முதல் சிறை வரை... ITR தாக்கல் செய்யவில்லை என்றால் சிக்கல் தான்..!

வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டது. காலக்கெடுவுக்கு முன்னதாக ஐடிஆர் தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை தொடர்ந்து மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 22, 2023, 04:13 PM IST
  • நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம்.
  • தவறான தகவல் கொடுத்தால் அபராதம்
  • வரி திரும்ப கிடைப்பதில் தாமதம்.
அபராதம் முதல் சிறை வரை... ITR தாக்கல் செய்யவில்லை என்றால் சிக்கல் தான்..! title=

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2023 ஆகும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, நீங்கள் வருமான வரியின் வரம்புக்கு உட்பட்டு இன்னும் உங்கள் ITR ஐ தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த வேலையை விரைவில் முடிக்கவும். காலக்கெடுவிற்கு முன் நீங்கள் இந்த வேலையை முடிக்கவில்லை என்றால், பின்னர் இந்த வேலைக்கு அபராதம் செலுத்த வேண்டும். ஜூலை 31, 2023க்குள் உங்கள் ITR ஐ நீங்கள் தாக்கல் செய்யவில்லை என்றால், இந்தப் பணியை முடிக்க உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம். தாமதமாக தாக்கல் செய்வதற்கான விருப்பம் டிசம்பர் 31, 2023 வரை உள்ளது. ஆனால் இதற்கு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும்.

எவ்வளவு அபராதம் விதிக்கலாம்

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ள தனிநபர்கள் வருமான வரியை  தாமதமாக தாக்கல் செய்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்பவர்களுக்கு உடனடியாக ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என்று எஸ்ஏஜி இன்ஃபோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமித் குப்தா பிசினஸ் டுடேயிடம் தெரிவித்தார். இது தாமதத்திற்கான அபராதம், இது தாமதத்தின் காலத்தைப் பொறுத்தது.

வரி விலக்கில் இழப்பு

இது தவிர, சரியான நேரத்தில் ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்கள் வரி விலக்கில் இழப்பை சந்திக்க நேரிடும். இது இறுதியில் வரி செலுத்தும் தொகையை அதிகரிக்கலாம். டிசம்பர் 31, 2023க்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்தால், ரூ.10,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஜூலை 31, 2023க்குள் ஐடிஆர் தாக்கல் செய்யத் தவறினால்,  வருமான வரி தாக்கல் செய்யாத வரை மாதத்திற்கு ஒரு சதவீதம் கூடுதல் வட்டி விதிக்கப்படும். வருமான வரி தாக்கல் செய்யும் தேதி வரை ஒரு சதவீத வட்டி விதிக்கப்படும் என்று டிவிஎஸ் அட்வைசர்ஸ் பார்ட்னர் சுந்தர் ராஜன் டிகே தெரிவித்தார்.

மேலும் படிக்க |  Good News: வருமான வரி ரீஃபண்ட் பணம் வர தொடங்கியது.. நீங்கள் ITR தாக்கல் செய்தீர்களா இல்லையா?

தவறான தகவல் கொடுத்தால் அபராதம்

ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, ​​குறைவான வருமானத்தை அறிவித்தால் 50 சதவிகிதம் அல்லது தவறான வருமானத் தகவலைக் கொடுத்தால் 200 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படலாம். இந்த அபராதம் மொத்த வரி  தொகையில் விதிக்கப்படும். டெலாய்ட் இந்தியாவின் பங்குதாரர் சுதாகர் சேதுராமன், தொடர்ந்து நினைவூட்டல்கள் இருந்த போதிலும் வரிக் கணக்கை தாக்கல் செய்யாதது நிலுவையில் உள்ள வரி பாக்கிகளின் அடிப்படையில் வழக்குத் தொடர வழிவகுக்கும், என்றும், இது மூன்று மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும் என்றார்.

வரி திரும்ப கிடைப்பதில் தாமதம்

ஒரு வரி செலுத்துவோர் காலக்கெடுவிற்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால், இழப்பை (வீட்டுச் சொத்து இழப்பைத் தவிர) அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்ததற்கான மற்றொரு சிக்கல்,  வரியை திரும்பப் பெறுவதும் தாமதமாகலாம். இத்தகைய தாமதங்கள் தேவையற்ற நிதி நெருக்கடி மற்றும் சிரமத்திற்கு வழிவகுக்கும். கூடுதலாக, தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்பவர்களின் விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்யலாம் மற்றும் வரி தொடர்பான விஷயங்களில் தணிக்கை மற்றும் விசாரணைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | வரி செலுத்துவோர் கவனத்திற்கு! இந்த வருமானத்தை மறைத்தால் 10 லட்சம் அபராதம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News