இந்திய ரயில்வேயின் மிக நீண்ண்ண்ட ரயில்... பெட்டிகளை எண்ணியே டயர்டாயிடும்...!!

ரயில்வேயின் மிக நீளமான ரயில் பற்றி  மிகச் சிலரே அறிந்திருப்பார்கள். நீளம் அதிகமான  இந்த ரயிலை இழுக்க ரயில்வேக்கு 6 இன்ஜின்கள் தேவை. மேலும், இந்த ரயில் ஒரு நிலையத்தை கடக்க 4 நிமிடங்கள் ஆகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 14, 2023, 10:36 AM IST
  • இந்திய ரயில்வேயின் மிக நீளமான ரயில்கள்
  • இந்தியாவின் மிக நீளமான ரயில், 295 பெட்டிகளை கொண்டது.
  • ரயிலை இழுக்க ரயில்வேக்கு 6 இன்ஜின்கள் தேவை.
இந்திய ரயில்வேயின் மிக நீண்ண்ண்ட ரயில்... பெட்டிகளை எண்ணியே டயர்டாயிடும்...!! title=

புதுடெல்லி: இந்திய ரயில்வே, உலகின்  மிக பெரிய ரயில்வே நெவொர்க்குகளில் ஒன்று, ரயிலில் பயணம் செய்யாதவர்களை பார்ப்பதும் அரிது. பொதுவாக ஒரு ரயிலில் 15 முதல் 18 பெட்டிகள் இருக்கும்.  அதை நீங்கள் எளிதாக எண்ணிவிடலாம், ஆனால் இன்று நாம் சொல்லப் போகும் ரயிலின் பெட்டிகளை எண்ணினால் நீங்கள் சோர்வடைவீர்கள். இந்த ரயில் நடைமேடையில் நிற்கும் போது, ​​அதன் பெட்டிகள் நடைமேடை முடிந்த பிறகும் பல கிலோமீட்டர்கள் தொடர்கின்றன. இந்த ரயிலை இழுக்க ஒன்றல்ல இரண்டல்ல 6 இன்ஜின்கள் தேவை என்பதிலிருந்தே இதன் நீளத்தை யூகிக்க முடியும். இந்த மிக நீளமான ரயில்களில், சரக்கு ரயில்கள், பயணிகள் ரயில்கள் இரண்டும் அடங்கும்.

நாட்டின் மிக நீளமான ரயில்

இந்தியாவின் மிக நீளமான ரயில்கள் பட்டியலில் முதல் ரயில் சூப்பர் வாசுகி. இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் மிக நீளமான சரக்கு ரயில் . இதன் நீளம் 3.5 கி.மீ. சூப்பர் வாசுகியின் சிறப்பு பற்றி பேசுகையில், இதில் 295 பெட்டிகள் உள்ளனர். இந்த ரயிலை இழுக்க 6 இன்ஜின்கள் தேவை. இந்த சரக்கு ரயில் ஆகஸ்ட் 15, 2022 அன்று தொடங்கியது. நாட்டின் மிக நீளமான ரயில் ஒரு நிலையத்தை கடக்க 4 நிமிடங்கள் ஆகும். இந்த சரக்கு ரயில் 27,000 டன் நிலக்கரியுடன் சத்தீஸ்கரில் உள்ள கோர்பாவிலிருந்து நாக்பூரில் உள்ள ராஜ்நந்த்கான் வரை செல்கிறது. 5 சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சூப்பர் வாசுகி தயாரிக்கப்படுகிறது.

சேஷ்நாக் ரயில்

நாட்டின் மிக நீளமான ரயில்களில் ஷெஷ்நாக் ரயில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் இந்த ரயிலின் நீளம் 2.8 கி.மீ. இந்த சரக்கு ரயிலை இழுக்க 4 இன்ஜின்கள் தேவை. இதில் மொத்தம் 251 பெட்டிகள் உள்ளது.

மேலும் படிக்க | ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘7’ விதிகள்!

விவேக் எக்ஸ்பிரஸ்

சரக்கு ரயிலுக்குப் பிறகு பயணிகள் ரயிலைப் பற்றி பேசுகையில், மிக நீளமான பயணிகள் ரயில் என்ற விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயிலில் 23 பெட்டிகள் உள்ளன. இது இந்தியாவின் மிக நீண்ட ரயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயில் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படுகிறது. அசாம், நாகாலாந்து, பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 9 மாநிலங்கள் வழியாக செல்கிறது. இந்த ரயில் 4 நாட்களில் 4234 கிமீ தூரத்தை கடக்கிறது. இந்த ரயில் பயணத்தின் போது 59 நிலையங்களில் நின்று செல்லும்.

இந்திய ரயில்வே

இந்தியா முழுவதும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்க, நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இடங்களுக்கு, ரயில் வழித்தடங்களின் நீளம் கடைசியாக 68,000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கிராமக்ங்கள், நகரங்கள் என அனைத்தும் ரயில் போக்குவரத்தினால் இணைக்கபபட்டுள்ளன. தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரயில்வே ஒரு முக்கிய பயண ஆதாரமாக உள்ளது.

மேலும் படிக்க | Indian Railways: ‘இந்த’ ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் ஒரு பைசா கூட திரும்ப கிடைக்காது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News