PPF திட்டத்தில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால், ரூ.18 லட்சத்துக்கு மேல் பெறலாம்

PPF  திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதலீடு செய்து ரூ.18 லட்சத்துக்கு மேல் பணம் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 12, 2022, 09:52 PM IST
PPF திட்டத்தில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால், ரூ.18 லட்சத்துக்கு மேல் பெறலாம் title=

பொது வருங்கால வைப்பு நிதி: கொரோனா வந்த பிறகு தங்கள் எதிர்காலத்திற்கு சேமிப்பு மிகவும் முக்கியம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். முடிந்தவரை பணத்தை சேமிப்பது புத்திசாலித்தனம். எனவே நீண்ட கால சேமிப்பில் அதிக வருமானம் தரும் சேமிப்புத் திட்டங்கள் கவர்ச்சிகரமான முதலீடுகள். ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதலீடு செய்து ரூ.18 லட்சத்துக்கு மேல் பணம் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.  

பொது வருங்கால வைப்பு நிதி

பிபிஎப் என்பது முதலீட்டின் மீதான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டமாகும். 1968ம் ஆண்டில், தேசிய சேமிப்பு அமைப்பு சிறு சேமிப்பில் லாபகரமான முதலீட்டு திட்டம் ஒன்றை உருவாக்க வழிவகை செய்யப்பட்டது. PPF திட்டத்தில் முறையாக முதலீடுகள்செய்யப்பட்டால், முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு சிறந்த வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

PPF முதலீடு விபரம்

தற்போது PPF திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்கப்படுகிறது. பொது எதிர்கால நிதியில், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். PPF கணக்கு முதிர்வு 15 ஆண்டுகள். கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகு பணத்தை எடுக்கவோ அல்லது 5 வருடத்த்திற்கு மேலும் கணக்கை நீட்டிக்கவோ செய்யலாம்.

மேலும் படிக்க | உங்கள் கணக்கில் இபிஎஃப் வட்டி வந்துவிட்டதா? எப்படி கண்டறிவது?

இரண்டு 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் கிடைக்கும் PPF வருமானம்

15 வருட காலப்பகுதியில் மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் அவர்களின் வைப்புத் தொகை ரூ.1.80 லட்சமாக இருக்கும். 7.1% வட்டி விகிதத்தில், இதற்கு ரூ. 1.45 லட்சம் வட்டி கிடைக்கும்., இதன் மூலம் PPF கணக்கில் உள்ள மொத்தத் தொகை ரூ. 3.25 லட்சமாக இருக்கும். 1,000 ரூபாய் மாதாந்திர வைப்புத் தொகையைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு விரிவுபடுத்தினால், இந்தத் தொகை ரூ.3.25 லட்சத்தில் இருந்து ரூ.5.32 லட்சமாக உயரும். இரண்டாவது 5 ஆண்டு நீட்டிப்பு தொகை 8.24 லட்சமாக இருக்கும்.

மூன்றாவது மற்றும் நான்காவது முறையாக PPF கணக்கை நீட்டித்தால் கிடைக்கும் வருமானம்

மூன்றாவது 5 ஆண்டு நீட்டிப்பில் இந்த தொகை 8.24 லட்சத்தில் இருந்து 12.36 லட்சமாக அதிகரிக்கும். ஏனெனில் முதலீட்டின் மொத்த காலம் 30 ஆண்டுகளை எட்டுகிறது. ஆரம்ப 15 ஆண்டுகளில் நான்காவது முறையாக நீட்டிக்கும் போது, 35 வருட முதலீட்டு காலத்திற்குப் பிறகு மொத்தம் ரூ.18.15 லட்சமாக கிடைக்கும்.

உங்கள் இளமையான வயதிலேயே, மாதம் ரூ.1,000 அல்லது உங்களால் முடிந்த அளவிற்கு என்ற அளவிற்கு PPF திட்டத்தில் முதலீடு செய்தால், நீங்கள் உங்கள் ஓய்வூதியத்தைத் திட்டமிடத் தொடங்கும் நேரத்தில் நல்ல வருமானத்தைப் பெறுவதை இது உறுதி செய்யும்.

மேலும் படிக்க | ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு அடித்த புதிய ஜாக்பாட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News