PAN Card வைத்திருக்கும் அனைவரும் ITR தாக்கல் செய்ய வெண்டுமா?

வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது ஆதார் அட்டை பான் அட்டையுடன் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியம். இது இல்லாமல் ITR செயல்படுத்தப்படாது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2020, 03:13 PM IST
  • PAN Card உள்ளவர்கள் அனைவரும் ITR தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.
  • 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் செய்ய PAN Card தேவை.
  • பங்குச் சந்தையில் முதலீடு செய்யவும் பான் கார்டும் தேவை.
PAN Card வைத்திருக்கும் அனைவரும் ITR தாக்கல் செய்ய வெண்டுமா? title=

புதுடெல்லி: இந்தியாவில் அனைத்து விதமான பண பரிவர்த்தனைக்கும் பான் கார்டு தேவை. பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டை 10 இலக்க எண்ணாகும். இது ஒரு நபரின் நிதி நிலை பற்றிய தகவல்களை தருகிறது.

பான் கார்டு வருமான வரித் துறை மூலம் வழங்கப்படுகிறது. பணி, வணிகம் செய்வதைத் தவிர, ITR தாக்கல் செய்யவும் PAN Card மிக முக்கியமாகும்.

ஆனால் PAN Card வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

PAN Card தொடர்பான முக்கிய விதிகளை வருமான வரித்துறை தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில், வருமான வரி செலுத்த விரும்பும் அனைவரிடமும் PAN Card இருக்க வெண்டியது கட்டாயமாகும். அதே போல், வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது ஆதார் அட்டை (Aadhaar Card) பான் அட்டையுடன் இணைக்கப்பட்டிருப்பதும் மிகவும் முக்கியம். இது இல்லாமல் ITR செயல்படுத்தப்படாது.

PAN Card இல்லாமல், உங்கள் உண்மையான வரி தொகையின் அளவை அறிய முடியாது. PAN Card மூலம் வரி ஏய்ப்பையும் தவிர்க்க முடியும்.

யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும்

PAN Card உள்ளவர்கள் அனைவரும் ITR தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. மறுபுறம், ஒரு நபர் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139 இன் கீழ் வந்தால், அவர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

ALSO READ: IT Refund-க்கு ஆசைப்பட்டால் Bank Account காலி ஆகிவிடும்: எச்சரிக்கும் IT Department

இந்த பிரிவின் கீழ், குறிப்பிடப்பட்ட வருமானத்தின் கீழ் வரும் ஒவ்வொரு நபரும் வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். PAN Card வைத்திருக்கும் ஒரு நபரது வருமானம், வருமானம் வரி (Income Tax) விதிக்கக்கூடிய வருமான வரம்பில் இல்லை என்றால், அவர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இந்த பணிகளுக்கு பான் கார்டு தேவை

இது தவிர, வேறு சில முக்கியமான பணிகளுக்கும் PAN Card கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட அசையாச் சொத்தை வாங்கும் போது பான் கார்டு தேவை. இது தவிர, வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் செய்ய அல்லது பெரிய அளவிலான FD அல்லது RD போடும்போதும் PAN Card அவசியம் தேவை.

இது தவிர, ஐம்பது ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுள் காப்பீட்டு (Life Premium) பிரீமியம் எடுக்கவும் பான் அட்டை அவசியமாகும். அதே போல், பங்குச் சந்தையில் (Share Market) முதலீடு செய்யவும் பான் கார்டும் தேவை.

PAN Card அரசுத் துறையால் வழங்கப்படுகிறது. இந்த காரணத்தால், இந்த அட்டையை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம்.

ALSO READ: ஜனவரி 1 முதல் SBI காசோலை செயல்முறையில் பெரிய மாற்றம்: விவரம் உள்ளே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News