Form 16 இல்லையா? நோ டென்ஷன்.. நீங்களும் ITR தாக்கல் செய்யலாம்.. இதோ செயல்முறை

Form 16: 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான படிவம் 16 இல்லாமலேயே வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய முடியும் என்பது வரி நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 22, 2023, 04:08 PM IST
  • தனிநபர்கள் படிவம் 16 ஐ சார்ந்தில்லாமல் தங்கள் ITR -ஐ வெற்றிகரமாக தாக்கல் செய்யலாம்.
  • ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டவுடன், அதை இ-வெரிஃபை செய்ய வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
  • இ-வெரிஃபை இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட ஐடிஆர் முழுமையடையாததாக கருதப்படும்.
Form 16 இல்லையா? நோ டென்ஷன்.. நீங்களும் ITR தாக்கல் செய்யலாம்.. இதோ செயல்முறை title=

Form 16: இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு படிவம் 16 மிக முக்கியமான ஆவணமாகும். மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்) மற்றும் சம்பளக் கூறுகளின் விவரங்களுடன் இது முதலாளி /  நிறுவனத்தால் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. வருமான வரி விதிகளின்படி, ஒவ்வொரு முதலாளி / நிறுவனமும் TDS -க்கு உட்பட்ட வருமானம் உள்ள ஊழியர்களுக்கு படிவம் 16 ஐ வழங்க வேண்டும். படிவம் 16 ஐ வழங்காத சந்தர்ப்பங்களும் சில இருக்கலாம். இருப்பினும், படிவம் 16 ஒரு நபருக்கு வழங்கப்படாவிட்டால், அவரும் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யலாம். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

Form 16:

Form 16 இல்லாமல் ஐடிஆர் தாக்கல் செய்ய முடியும். 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான படிவம் 16 இல்லாமலேயே வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய முடியும் என்பது வரி நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படிவம் 16 பொதுவாக சம்பளம் பெறும் ஊழியர்களால் செயல்முறையை எளிதாக்க பயன்படுத்தப்படுகிறது. படிவம் 16 இல்லாவிடில், தனிநபர்கள் தங்கள் ITR-ஐ, சம்பளச் சீட்டுகள் மற்றும் படிவம் 26AS போன்ற பிற ஆவணங்களைப் பயன்படுத்தி, முதலீட்டுப் பதிவுகளுடன் சேர்த்து விலக்கு கோரலாம்.

சம்பளம் வாங்கும் நபர்கள் Form 16 இல்லாமல் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி?

- முதலில் சம்பந்தப்பட்ட நிதியாண்டின் அனைத்து சம்பள சீட்டுகளை (சேலரி ஸ்லிப்) எடுத்துக்கொள்ளுங்கள். இந்த சீட்டுகளில் சம்பளம், கொடுப்பனவுகள், விலக்குகள் மற்றும் பிற வருமான கூறுகள் பற்றிய விரிவான விவரங்கள் இருக்க வேண்டும்.

- இரண்டாவதாக, சம்பளச் சீட்டுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி அடிப்படை ஊதியம், கொடுப்பனவுகள், சலுகைகள், போனஸ் போன்ற சம்பளத்தின் அனைத்து கூறுகளையும் கருத்தில் கொண்டு வரிக்குரிய வருமானம் கணக்கிடப்பட வேண்டும். வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), நிலையான விலக்கு மற்றும் தொழில்முறை வரி போன்ற தொடர்புடைய விலக்குகள் வரிக்கு உட்பட்ட வருமானத்தைப் பெற கழிக்கப்பட வேண்டும்.

- தனிநபர்கள், வட்டி வருமானம், ஈவுத்தொகை அல்லது அவர்களின் சம்பளத்திற்கு அப்பாற்பட்ட வருமானம் போன்ற ஏதேனும் கூடுதல் வருமான ஆதாரங்களை அடையாளம் காண அவர்களது வங்கி அறிக்கைகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும். இந்த தொகைகள் வரிக்கு உட்பட்ட வருமானத்தை கணக்கிடுவதில் சேர்க்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | வீட்டிலேயே ITR தாக்கல் செய்யலாம், எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்

- கடைசியாக, வருமான வரித் துறையின் இணையதளம் மூலம் அணுகக்கூடிய படிவம் 26AS-ஐச் சரிபார்க்க வேண்டியது அவசியம். படிவம் 26AS தனிநபரின் பான் எண்ணில் கழிக்கப்பட்ட மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட அனைத்து வரிகளின் ஒருங்கிணைந்த அறிக்கையை வழங்குகிறது. படிவம் 26AS இல் குறிப்பிடப்பட்டுள்ள TDS விவரங்கள் கணக்கிடப்பட்ட வருமான விவரங்களுடன் பொருந்துவதை உறுதி செய்வது அவசியம். ஏதேனும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், அந்த முரண்பாடுகளை நீக்க, நிறுவனம் அல்லது வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, தேவையான துணை ஆவணங்களை வழங்கி தனிநபர்கள் படிவம் 16 ஐ சார்ந்தில்லாமல் தங்கள் வருமான வரி கணக்கை (ITR -ஐ) வெற்றிகரமாக தாக்கல் செய்யலாம். ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டவுடன், அதை இ-வெரிஃபை செய்ய வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இ-வெரிஃபை இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட ஐடிஆர் முழுமையடையாததாக கருதப்படும். மேலும் வருமான வரித் துறையின் மூலம் செயலாக்கத்திற்கு இது பரிசீலிக்கப்படாது.

மேலும் படிக்க | Income Tax Benefits: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News