Healthy Fruit: விளாம்பழத்தில் இத்தனை மகத்துவமா? தெரியாம போச்சே!!

பித்தம், கால்சியம் குறைபாடு, நரம்பு தளர்ச்சி என பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாக இருக்கும் பழங்களில் முக்கியமானது விளாம்பழம்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 11, 2021, 10:34 PM IST
  • அருமருந்தாக திகழும் விளாம்பழம்
  • பழமே மருந்தாகும் அதிசயம்
  • பழமே பேரழகாக்கும் அற்புதம்
Healthy Fruit: விளாம்பழத்தில் இத்தனை மகத்துவமா? தெரியாம போச்சே!! title=

ஆரோக்கியமான உணவுகளையும், காய் கனிகளையும் உண்டால் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம் உண்டு. பித்தம், கால்சியம் குறைபாடு, நரம்பு தளர்ச்சி என பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாக இருக்கும் பழங்களில் ஒன்று "விளாம்பழம்".

பித்தம் சம்மந்தமான உடலில் ஏற்படும் சூட்டை குறைக்க விளாம்பழம் மிகச்சிறந்த ஒன்று. விளாம்பழத்தின் சதைப் பகுதியுடன் பனைவெல்லம் சேர்ந்து இரவு முழுவதும் வைத்து, காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும். 

விளாம்பழத்தில் உள்ல கால்சியம், பல்லுக்கும், எலும்புக்கும் மிகவும் நன்மை பயக்கின்றன. கால்சியம் விட்டமின் பி12 சத்தை அதிகமாக கொண்ட இந்த பழத்தை சாப்பிட்டால், 
மாதவிடாய் கோளாறுகள், உதிரபோக்கு அதிகமாவது மற்றும் வெள்ளைபடுதல் போன்றவர்களின் பிரச்சனைகள் தீரும். அதுமட்டுமல்ல, பெண்களுக்கு மார்பகம் மற்றிலும் கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

ALSO READ | மாதவிடாய் காலங்களில் மென்சுரல் கப் பயன்படுத்து நல்லதா

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட விளாம்பழம் பாம்புகடியின் வீரியத்தை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. யானைகள் மிகவும் விரும்பும் பழம் விளாம்பழம். ஓட்டுடன் கூடிய விளாம்பழத்தை யானைகள் அப்படியே விழுங்கிவிடுமாம்! ஆனால் அதிசயம் என்னவென்றால், யானையின் சாணத்தில் ஓடு மட்டுமே வெளிவருமாம்! விதைகளையும் செரிமாணம் செய்யும் சக்தியைக் கொண்ட்த யானை.

முக வறட்சியைப் போக்கி பொலிவை கொடுக்கும் விளாம்பழத்தின் சதைப்பகுதி அழகுக்கு அழகு சேர்க்கிறது. விளாம்பழம் விழுதை எடுத்து, அத்துடன் பசும்பால் அல்லது மோரை கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி ஒருவாரம் தொடர்ந்து செய்து வந்தால், முகம் ப்ளீச் செய்யப்பட்டது போல பளபளக்கும்.
 பழமாக உண்பதற்கும், அழகை பேரழகாக்கும் வெளிப்பூச்சாக பயன்படுத்துவதற்கும் உரிய பழவகைகளில் முதலிடத்தைப் பெறுகிறது விளாம்பழம்.

READ ALSO | எலும்பு மெலிதல் நோயிலிருந்து தப்பிக்க கால்ஷியம் போதாது  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News