Dating: சபாஷ்! சரியான கேள்வி! கொரோனா தடுப்பூசி போடாத ஒருவருடன் டேட்டிங் செய்வீர்களா?

ஒருவரின் எச்சில் பட்டால் கொரோனா தொற்று பரவும், காற்றில் கொரோனா பரவுகிறது என்பது உட்பட பல விஷயங்களால் தான் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற விஷயங்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் டேட்டிங் செல்வது பாதுகாப்பானதா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 19, 2021, 12:06 AM IST
  • இப்போது டேட்டிங் செல்பவர்களுக்கான நிபந்தனை என்ன தெரியுமா?
  • கொரோனா தடுப்பூசி போட்டாயிற்றா?
  • காதலுக்கு கண் இல்லை என்றாலும் உயிரச்சம் இருக்கிறது!
Dating: சபாஷ்! சரியான கேள்வி! கொரோனா தடுப்பூசி போடாத ஒருவருடன் டேட்டிங் செய்வீர்களா? title=

கொரோனா தொற்று நோய் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படாமலும் இருக்கலாம். ஆனால், அந்த நோய் தன்னுடன் இருப்பவர்களின் உயிரையும் பலிவாங்கிவிடும் என்ற கொடூரமான ஆபத்தை கொண்டிருப்பதால் தான் கொரோனா என்ற பேரைக் கேட்டாலே அனைவரும் அஞ்சி நடுங்குகின்றனர்.

ஒருவரின் எச்சில் பட்டால் கொரோனா தொற்று பரவும், காற்றில் கொரோனா பரவுகிறது என்பது உட்பட பல விஷயங்களால் தான் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற விஷயங்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், உலகின் இயல்பு வாழ்க்கையே புரட்டி போட்டிருக்கும் கொரோனா காதல் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பது தெரியுமா? நெருக்கமே கூடாது என்ற நிலையில் திருமணமாகி பல ஆண்டுகளாக ஒன்றாய் வாழும் தம்பதிகள் கூட தனது துணையுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அச்சப்படும் காலமாகிவிட்டது.

Also Read | Neanderthals: மனிதர்களுடன் உடலுறவு கொண்டதால் நியண்டர்டால்கள் அருகியிருக்கலாம்: ஆய்வு

ஆனால், கொரோனா தொடங்கியபோது இருந்த அச்சம் இப்போது படிப்படியாக விலகிவிட்டது போல தோன்றுகிறது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்லக் கேட்டிருக்கலாம். உணர்வுகளின் கொந்தளிப்பாய் காதல் வேட்கை ஏற்பட்டால், கொரோனா அச்சமும் சற்று மட்டுப்பட்டுத் தான் போகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல மட்டுப்பட்டிருக்கும் நிலையில், மூன்றாம் அலை எப்போது என்ற மிகப்பெரிய கேள்விக்கு மத்தியில் காதலும் அது தன் வேலையை செய்துக் கொண்டு தான் இருக்கிறது.

எனவே, இதுதொடர்பாக ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதாவது, கொரோனா தடுப்பூசிக்கும், ஒருவர் டேட்டிங் செய்வதற்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆராய்ச்சி அது. அந்த ஆய்வின் முடிவுகளின்படி, சுமார் 80 சதவிகிதம் பெண்களும் 70 சதவிகித ஆண்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருடன் டேட்டிங் செய்ய விரும்புகிறார்கள். யாராவது தடுப்பூசி போடவில்லை என்றால், அவர்களை நிராகரிக்கின்றனர்.

Also Read | இந்தியாவில் ஒரே நாளில் 88.13 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கி சாதனை

அதாவது, பெரும்பாலான மக்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுடன் மட்டுமே டேட்டிங் செல்ல விரும்புகிறார்கள். இந்த தகவல் ஒரு சர்வேயில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் டேட்டிங் வலைதளமான குவாக் க்வாக் (online dating site QuackQuack) தலைமையிலான ஒரு கணக்கெடுப்பின் முடிவுகள், மக்கள் தற்போது டேட்டிங் போவதற்கு முன்னதாக தடுப்பூசிகளைப் பற்றி அதிகம் பேசுவார்கள் என்பதைக் காட்டுகிறது. இதுவே கொரோனா பரவலுக்கு முன்பு, டேட்டிங் செல்பவர்களின் பேச்சில் வேறு பல விஷயங்கள் இடம் பெற்றிருந்தனவாம்!

18-30 வயதிற்குட்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்ட பின்னரே தங்கள் டேட்டிங் கூட்டாளியை சந்திக்க விரும்புகின்றனர். 31 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10இல் 8 பேர் டேட்டிங் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை முன்நிபந்தனையாக முன் வைக்கின்றனர். 

Also Read | கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற 3வது டோஸ் தடுப்பூசி அவசியம்! திடுக்கிடும் தகவல்

18-30 வயதிற்குட்பட்டவர்களில் 30 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டிருப்பதை கருத்தில் கொள்ள மாட்டார்கள் என்றும், டேட்டிங் செல்லும் போது பிற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிகிறது.

சுமார் 80 சதவிகிதம் பெண்களும் 70 சதவிகித ஆண்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருடன் டேட்டிங் செய்ய விரும்புகிறார்கள். பொதுவாக ஆண் பெண் இருபாலருமே, தடுப்பூசி போட விரும்பாதவர்களை அதிகம் ஊக்குவிப்பதில்லை. தடுப்பூசிக்கு எதிரானவர்களில் 25 சதவிகிதத்தினருக்கு மட்டுமே டேட்டிங் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறதாம்!
 
குவாக் குவாக்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரவி மிட்டல் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறுகிறார்: ”தற்போதைய நெருக்கடி மற்றும் மக்கள் நல்வாழ்வுக்காக வழங்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளை மக்கள் கவனக்குறைவாகக் கடைப்பிடிக்கவில்லை என்பது குறித்த சில முக்கியமான விசயங்களை இந்த ஆய்வு எங்களுக்கு வழங்கியுள்ளது” என்கிறார்.

Also Read | 3rd Dose of Corona Vaccine: மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவை?

கொரோனா இரண்டாவது அலை பற்றி அச்சமடைந்துள்ள மக்கள், இப்போது மூன்றாம் அலையைப் பற்றியும் கவலைப்படுகிறார்கள். இப்போது டேட்டிங் செல்பவர்கள் பேசிக் கொள்ளும் விஷயத்தில் லாக்டவுன், கோவிட், முகக்கவசம், தடுப்பூசி (Lockdown, Covid, Mask, Vaccine) என புதிய விஷயங்களும் சேர்ந்துவிட்டன.

டேட்டிங் (Dating) செல்ல விரும்புபவர்கள், தங்களுக்கான துணையை தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா என்பதை சொல்ல வேண்டியது அவசியமாகிவிட்டது. எனவே, தடுப்பூசி என்பது ஒரு நபரின் காதலுக்கும், டேட்டிங்கிற்கும் ஒரு கூடுதல் தரமாக மாறிவிட்டது.

எங்கள் பயனர்களின் பாதுகாப்பை நாங்கள் எப்போதும் முன்நிறுத்துகிறோம் என்று சொல்லும் ரவி மிட்டல், எங்கள் இணையதளத்தில் இதற்கான இணைப்புகளை வழங்கியுள்ளோம்.

எனவே, எங்கள் பயனர்கள் தங்களுக்கான காதல் (Love) இணையைத் தேடும் போது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான எங்கள் பங்களிப்பை சரியாக செய்கிறோம் என்கிறார்.

Also Read | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News