Instagram Filter போல தோற்றமளிக்க 30 லட்சம் ரூபாய் செலவு!

இன்ஸ்டாகிராம் filter போல தோற்றமளிக்க பிளாஸ்டிக் 30 லட்சம் ரூபாய் செலவு செய்பவரைப் பற்றித் தெரியுமா?  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 17, 2021, 07:44 PM IST
  • Instagram Filter போல தோற்றமளிக்க விபரீத செயல்
  • 30 லட்சம் ரூபாய் செலவு!
  • பல அறுவை சிகிச்சைகள்!
Instagram Filter போல தோற்றமளிக்க 30 லட்சம் ரூபாய் செலவு! title=

இன்ஸ்டாகிராம் filter போல தோற்றமளிக்க பிளாஸ்டிக் 30 லட்சம் ரூபாய் செலவு செய்பவரைப் பற்றித் தெரியுமா?  

இன்ஸ்டாகிராம் மாடலாக இருப்பவர் Levi Jed Murphy என்ற பெண். அவர் தனது காதலனுடன் OnlyFans என்ற கணக்கை வைத்திருக்கிறார். சமூக ஊடகத்தின் மீதுள்ள அபிமானத்தால் இன்ஸ்டாகிராம் filter போல தோற்றமளிக்க நிறைவு செலவு செய்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆர்வமுள்ளவர்களுக்கு Instagram filter பற்றி நன்றாகத் தெரியும். இது நீங்கள் பார்க்கும் முறையையும், புகைப்படத்தின் பின்னணியையும் முற்றிலும் மாற்றும். ஆனால் மான்செஸ்டரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் Instagram filter அம்சத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு, அதைப்போல் தோற்றமளிப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். அதற்கான செலவு 30 லட்சம் (£ 30,000) ரூபாய்!  

Also Read | Ind vs Eng 3rd T20I: ஷார்துல் தாகூர் ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்தது ஏன் - Virat Kohli

அறுவை சிகிச்சைகள் மூலம் மர்பி தனது உதடுகள், கன்னங்கள், கன்னம், தாடை மட்டுமல்ல, தனது கண்களுக்குக் கீழே கூட fillerகளை பொருத்திக் கொண்டு தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல, nose job, lip lift, a temple lift, a cat eye lift மற்றும் பல்லிலும் மாற்றங்களை செய்துக் கொண்டுள்ளார். 

இப்போது அறுவைசிகிச்சைகள் தனது அழகை அதிகரித்துவிட்டதாக மர்பி சந்தோஷப்பட்டாலும், பலரும் அவரை விமர்சிக்கின்றனர். சமூக ஊடகத்தில் பிரபலமாவதற்காக அவர் செய்துக் கொண்ட அறுவைசிகிச்சைகள் அனைவரும் அவரை ட்ரோல் செய்வதற்கான விஷயமாக மாறிவிட்டது.

Also Read | X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!

மர்பி தனது 19 வயதில் லிப் ஃபில்லர்களுடன் தனது முதல் அழகு சிகிச்சையை “அது எப்படி என்னை உருமாற்றியது என்பதை நான் நேசித்தேன். பிறகு 20 வயதில் எனது கன்னம், தாடை மற்றும் கண் என பல இடங்களில் அழகு சிகிச்சைகளை மேற்கொண்டேன். மொத்தம் எத்தனை மாறுதல்களை செய்துள்ளேன் என்ற எண்ணிக்கையே மறந்துவிட்டது.”

“20 வயதிற்குள், நான் மூக்கு மற்றும் உதட்டில் மாற்றங்களை செய்துகொண்டதற்கு காரணம் அவை நன்றாக இல்லை என்பதால் அல்ல, யாரும் என்ன்னுடைய மூக்குக்காகவோ, உதட்டிற்காகவோ  விமர்சிக்கவோ வெறுக்கவோ இல்லை. ஆனால் என் முகம் எனக்கே சலித்து போய்விட்டது. என் தோற்றத்தை மாற்ற விரும்பியதால் தான் அழகுக்காக அறுவை சிகிச்சைகளை செய்தேன்” என்று மர்பி கூறுவது பலருக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

Also Read | போதை ஏறினா ஏன் இங்கிலீஷ்ல பேசனும்? இதோ அறிவியல் காரணம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News